மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (மீசை பாரதி நடந்தான், உடுக்கல்)

இல. பிரகாசம்

May 12, 2018

 

மீசை பாரதி நடந்தான்

siragu meesai bharadhi1

 

அவன்

அந்தத் தெருவில் நடந்து சென்றான்

‘ஏய்” என்று ஒரு குரல்

மீண்டும் வலுவான குரல்கள் ‘ஏய்”

 

அவன் காலடித்தடத்தின் சூடு நிலைகொள்ள

மிக உறுதியாக நின்றான்.

‘யாரடா” என்று திருப்பிக் கேட்டான்

வேசி மொழிகள் பல

அவன் செவியை அறுக்க முனைந்தன

‘மேட்டுத் தெருவுல நடக்க துணிச்சலா?”

உங்கப்பனும் ஆத்தாளும் உன்னை வீதிக்கா பெத்தாங்க?

சாட்டையைப் போல் அவன் மீசை சுழற்றி அடித்தது

மீசை வெறும் மயிர்கள் மட்டுமல்ல

ஜாதித்துவேசம் நறுக்குமடா

நவீன மீசை பாரதியடா

இந்த மீசை என்றான்.

அவனது

முதுகு நிமிர்ந்ததை பார்த்த போது

உள்ளம் வீறியத்தோடு சிலிர்த்தது.

 

உடுக்கல்

siragu meesai bharadhi2

 

உடுத்துக்களைந்த பின்னால்

என்னுடைய

அழுக்குப் படிந்த சட்டைக் கழுத்துப்பட்டையின் வாடை

அறையை சுற்றியபடியே சுழன்று கொண்டிருந்தது.

 

வெளியில் சென்ற இடத்தில் என்னோடு

புணர்ந்த புழுதிகள் மண்டிக்கிடந்தது கண்டு

நெறிக்கும் ஒரு கழுத்துப் பட்டன்.

வாடையின் வீச்சம் என்குடலை புரட்டியது

என்னுடலின் மேல்தோலை உரித்துப் போட்டு

இங்கிருந்து ஓடோடிச் சென்றுவிட வேண்டுமென

எண்ணுகிறேன்.

 

அழுக்குப் படிந்த கழுத்துச் சட்டை

அதட்டிக் கூப்பிட்டது

~உன்னுடைய அழுக்கை நீயே சுவாசி

உன்னுடைய அழுக்கை நீயே நேசி| என்றது.

அவைகள்

மீண்டும் என்னை உடுத்திக் கொண்டன

அவைகள் நிழல்கள்

என்னை எப்போதும் தொடரும் தவறுகள்

அவற்றுக்கு ஒரு வீடாக என்னுடல்.

 


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (மீசை பாரதி நடந்தான், உடுக்கல்)”

அதிகம் படித்தது