மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (2020 புத்தாண்டு பிறந்தது!, கந்தக நிறம்)

தொகுப்பு

Jan 11, 2020

 

2020 புத்தாண்டு பிறந்தது!

-  ”கலையரசு” எஸ். எஸ். சர்மா

 

siragu 2020புத்தாக்கச் சிந்தனைகள் மலர்ந்திடப்

பிறந்தது புத்தாண்டு!

விடைபெற்றது! நடை கட்டியது

இருபது பத்தொன்பதாம் ஆண்டு!

வந்துவிட்டோம் இருபது இருபதுக்கு!

கூடியது இன்னுமொரு அகவை

வேகமுடன் விரைகிறது காலம்!

கடிவாளம் போட்டுக் கட்டுண்டிராது

காண்போம் புதிய சகாப்தம்!

எழுச்சியும் வளர்ச்சியும்

எண்ணமும் திண்மையும்

ஏற்றம் தரும்! எதிர்நீச்சல் போட்டு

எட்டிப் பிடித்திடுவோம்!

பல்லினப் பேராண்மைச் சூழலிலும்

நல்லிணக்கம் போற்றிப் பேணிடுவோம்!

அறிவியல் ஆற்றலையும், பொறியியல்

பொருளியல், மின்னியல் தானியங்கித்

தொழில்நுட்பச் சாதனச் சாதனைகளில்

முனைந்து நின்று முன்னெடுப்போம்!

பூசல்கள், புலம் பெயர்ந்தோர்

அவலங்களை அகற்றிடுவோம்!

முதிர்ச்சியிலும் தளர்ச்சியிலும்

துவண்டிடாது உயர்ந்து திகழ்ந்திடப்

புத்தாக்கமும் புதுத்தெம்பும் பெற்றிடுவோம்!

மாசுகளைக் களைந்து மாற்றங்களையும்

நவீன தாக்கங்களையும் உள்வாங்கி

இயற்கைவளம் செழித்தோங்கிடவும்

நம் மரபும் மாண்பும் காத்துப் புத்தாண்டில்

புத்தெழுச்சியுடன் செயலாற்றுவோம்! ***

 

கந்தக நிறம்

 

-இல.பிரகாசம்

siragu kandhaga niram1

ஒற்றைத் தீக்குச்சியுடன் கூடிய புலிப்படம் போட்ட

பச்சைநிற காலி  தீப்பெட்டி

எனது கைக்கு கிடைத்த நேரம்

மிக அதிர்ஷ்ட கணம்.

பெருத்த சுகம் அளிக்கக் கூடியது

அதன் கந்தகப் பொடி வாசனை.

பிறகு

ஒற்றைத் தீக்குச்சியை மட்டும் கொண்ட

பல வண்ணத் தீப்பெட்டிகளை சேகரிக்கத் தொடங்கினேன்.

கந்தகமெனக்கு போதையூட்டியது.

சில நாட்களில் ஆழ்ந்த உறக்கத்தில் வெப்பத்தின் நெடியுடன்

ஒற்றைத் தீப்பெட்டிக்குள் குச்சிகள் ஒன்றையொன்று

பெருவெடிப்புப் போல

பெருஞ் சுவாலையாய் எழுந்தன.

கந்தகம் சிவப்பு நீல நிறத்தில் தன்னுருவத்தை காட்டி நின்றது.

 


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (2020 புத்தாண்டு பிறந்தது!, கந்தக நிறம்)”

அதிகம் படித்தது