மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நனைந்த குடையில் (கவிதை)

குமரகுரு அன்பு

Dec 4, 2021

Slow Motion of Rain and umbrella

மழையில் நனைந்த

குடை வாசலில்

நடுங்கி கொண்டிருக்கிறது!!

அதை விரித்தால்

தெளிக்கும் துளிகள்

ஒருசின்ன தூறல்!

ஆனாலும், இரவுநேரத்தில்

நான் உறங்கும்போது பெய்யும்

மழையைப் பார்த்து…

நாய்குட்டியாக மாறி

எனக்காக தன்கைப்பிடி வாலை

ஆட்டியபடி கிடக்கும் குடை

காலையில்

வருத்தத்தில் வறண்டு கிடக்கும்…

குடைப் பெரிதல்ல

மழைப் பெரிதல்ல

மழைக்குக் கீழ்

குடைக்குக் கீழ்

முளைக்கும் ஒரு

முதல் முத்தம்தான்

மழையையும்

குடையையும்

உலகையுமே விரித்து

பறக்க வைக்கிறது!!

குடல் பிடுங்கும் நாற்றத்தின் நடுவில்

பீடியைப் புகைத்து கொண்டிருக்கும்,

பிணவறை தொழிலாளியின் மனைவி தலைமுழுவதும் மல்லிகைச் சூடுவாள்

வீடுமுழுதும் ஊதுபத்தி வாசம் நிரப்புவாள்

சாராய நெடியுடன் வந்து கட்டியணைப்பவனை

கொஞ்சி கொஞ்சி

நிதானத்துக்கு வரசெய்வாள்…

இருவரின் முத்தமும்

இறந்தவன் நெற்றியில்

இடப்படும் இறுதி முத்தத்தின்

பேரன்பைச் சுமந்திருக்கும்!!


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நனைந்த குடையில் (கவிதை)”

அதிகம் படித்தது