மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நவில் (கவிதை)

மஹேஷ்

Dec 11, 2021

siragu noolgal2

கால்களே நூல்களாகும்

கண்மூடி

சாய்ந்து கொண்டால்

தூண்களும் நூல்களாகும்.

 

நூல்கள் உறவுகளானால்

உறவுகளும் நூல்களாகும்.

 

நூல்களே கண்டடையும்

சிலரை சிலநேரம்.

 

ஒரே வானம் ஒரு சூரியன்

கணக்கில்லா வர்ணஜாலம் ..

நூல்களும் அவ்வாறே..

 

நம்வரலாற்றுக் காலக்கோடு

படிப்பதற்கு முன்

படித்தபின்

இருவரும் ஒருவரல்ல…

 

நூல்கள் கை நீட்ட

ஞானம் வசப்படும்

ஞானம் கைவர

நூல்கள் நடைகட்டும்.


மஹேஷ்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நவில் (கவிதை)”

அதிகம் படித்தது