மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாகப்பட்டினம் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்



Mar 17, 2017

ராமேஸ்வரத்தைச்சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ-வை இலங்கை கடற்படை சுட்டு படுகொலை செய்தது.இந்தப் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள்போராட்டம் நடத்தினர்.

Siragu Fisherman struggle.jpg

மத்தியஅமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் இப்போராட்ட களத்திற்குசென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின் மீனவர்கள் போராட்டத்தைக்கைவிட்டனர். ஆனால் மீனவர் பிட்ஜோ-வின் படுகொலையை கண்டித்துநாகப்பட்டினத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தபோராட்டம் 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஐந்தாவது நாளான இன்று(17.03.17) ஒன்பது பெண்கள் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.மேலும் இரண்டு படகு உரிமையாளர்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல்விடுத்துள்ளனர்.

இந்நிலையில் போராட்ட குழுவினருடன் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் போன்றோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர் மீனவர்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாகப்பட்டினம் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்”

அதிகம் படித்தது