மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாகர்கோவிலில் ஒரு ஆச்சர்யம்: “சிட்டுக்குருவிகளை காக்கும் சந்தை வியாபாரிகள்!”

சு.நாகராஜன்

Aug 6, 2016

Siragu-Chittukkuruvi3

முன்பெல்லாம் சாதாரணமாக வீடுகள், வீதியோர மரங்கள், ஆலய சுவர்கள் என பார்க்க முடிந்த சிட்டுக் குருவிகள் இப்போது அரிதினும், அரிதாகி விட்டது. இதற்குக் காரணம் செல்லிடைப் பேசியின் கதிர் வீச்சு, விவசாய நிலங்கள் குறைந்தது, சிட்டுக் குருவிகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டது என ஆயிரம், ஆயிரம் காரணங்களை முன்வைக்கிறார்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.

Siragu-Chittukkuruvi1இதன் விளைவு இப்போது சிட்டுக்குருவிகளை அதிகம் காண்பதற்கே இல்லாமல் போய் விட்டது. இதற்கு மத்தியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் சர்வ சாதாரணமாக சிட்டுக்குருவிகளைக் காணமுடிகிறது. அதற்குக் காரணம் நாகர்கோவில் அப்டா சந்தையில் உள்ள வியாபாரிகள் என்பது தான் ஆச்சர்யமே! அதற்கு பாதை போட்டு கொடுத்துள்ளது குமரி மாவட்ட இயற்கையின் நண்பர்கள் என்னும் அமைப்பு. தமிழக அளவில் விவசாயிகளும், வியாபாரிகளும் தங்களுக்குள் ஒன்றிணைந்து மிகப்பெரிய அளவில் உருவாக்கிய சந்தை இந்த அப்டா தான்! அதில் தான் இப்போது சிட்டுக் குருவிகள் அட போட வைக்கின்றது.

இது எப்படி சாத்தியமானது?

Siragu-Chittukkuruvi5

இயற்கையின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் பேசினோம். “எங்கள் இயற்கையின் நண்பர்கள் அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் சிட்டுக்குருவி வளர்க்க விரும்புறவங்களுக்கு இலவசமா கூடு செய்து கொடுக்கிறோம். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக அப்டா சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கு கூடு கொடுக்குறோம். காரணம் சந்தை என்பதால் சிட்டுக்குருவிகளுக்குத் தேவையான உணவும் தாராளமாகக் கிடைக்கும். கூடவே இந்த இடம் சிட்டுக்குருவிகளுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.

Siragu-Chittukkuruvi6

உலகம் போகுற வேகத்தில் அலைபேசி, இணையம் என்று ரொம்பவே முன்னேறிட்டோம். இன்னொரு பக்கத்தில் இதனால் பல பாதிப்புகளும் வந்துவிட்டது. அலைபேசி டவரில் இருந்து வருகிற கதிர்வீச்சு கூட சிட்டுக்குருவி இனம் அழிவதற்குக் காரணம் தான். முன்பெல்லாம் கூரை,ஓடு வீடுகள் தான் அதிகமா இருக்கும். அதில் உள்ள துவாரங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்ந்திருந்தது. இப்பொழுது வீட்டு கட்டமைப்புகளும் மாறிவிட்டது. நகர்ப்புற விரிவாக்கம் என்ற பெயரில் மரங்களையும் வெட்டி விட்டோம். விவசாயிகளின் தோழனாக இருந்த இந்த சிட்டுக்குருவிகளை, விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றியதால் அதன் வாழ்விடத்தையும் அழித்து விட்டோம். மனிதர்களோடு நெருங்கிப் பழகிய குருவிகள் இப்போது நமக்கு வெறும் காட்சி பறவையாகிவிட்டது. வீட்டுக்கு வீடு சிட்டுக்குருவி கூடுகளை வைத்து அதை வளர்ப்பதுதான் அந்த இனத்துக்கு நாம செய்யும் நன்றியாக இருக்கும். அதற்கான எங்கள் முதல் முயற்சி தான் இந்த அப்டா சந்தை!”என்றார்.

Siragu-Chittukkuruvi2

ஆரோக்கியமான முயற்சி தான்! என்றவாறே சந்தைக்குள் நடைபோட்டபோது இன்னும், இன்னும் ஆச்சர்யங்கள் அதில் காத்திருந்தது. ஒவ்வொரு கடைகளிலும் சிட்டுக் குருவிகளுக்கான கூடுகளும் தவறாது இடம் பெற்றிருந்தது. சில கடைகளின் மூடும் பகுதிகளில் உள்ள சிட்டுக்குருவிகளின் கூடுகளையும், அந்த இனத்தையும் காக்க கடைகளையே அடைப்பதில்லை எனவும் தெரிவிக்கின்றனர். இந்த சந்தை எப்போதும் பரபரப்பாய் இயங்கக் கூடியது. தென் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வரும் காய்கறிகள், பழங்கள் ஆகியவை கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கூட செல்கின்றது. இதனால் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளும், சுமையுந்து ஆட்டோக்களும் இச்சந்தைக்குள் வந்து செல்கின்றது. அவற்றின் இடைவிடாத சத்தங்களுக்கு இடையில் சங்கீதமாய் கேட்கின்றது இந்த சிட்டுக் குருவிகளின் சத்தம்! மனதுக்கு இதத்தையும், மகிழ்வையும் கொடுத்து ரீங்காரமிடுகின்றன குருவிகள்.

How much constructive check a source diction you include in a composition depends both upon the amount of help you think readers need and upon your own preferences for spelling out logical relationships or leaving them implicit

சு.நாகராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாகர்கோவிலில் ஒரு ஆச்சர்யம்: “சிட்டுக்குருவிகளை காக்கும் சந்தை வியாபாரிகள்!””

அதிகம் படித்தது