மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாகர்கோவிலில் பரபரப்பு: மதுக்கடையை எதிர்த்து பெண்கள் போராட்டம்



May 22, 2017

தேசியமற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை மூடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள 3500 மதுக்கடைகள் மூடப்பட்டது.

மதுக்கடைகள் மூலமாக அதிகமாக வருமானம் ஈட்டிய தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை கிராமத்தில் திறப்பதற்கு ஏற்பாடு செய்தது. ஆனால் கிராமத்தில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்காக பெண்கள் உட்பட பொதுமக்கள் போராட்டம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

Siragu tasmac

அவ்வகையில் மதுக்கடை அமைப்பதற்காக நாகர்கோவில் கோட்டார் அருகே உள்ள பெரியவிளை பகுதியான ஏ.ஆர். கேம்ப் ரோட்டில் கட்டிடம் ஒன்று புதியதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்குள்ள ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

ஆனால் மதுக்கடைக்கான கட்டுமான பணி முடிவடைய உள்ள நிலையில் மனு வாங்கிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுக்கடை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அங்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த முதியர் ஒருவர் மதுக்கடையை திறந்தால் தீக்குளிப்பேன் என்று கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின் அனைவரும் கலைந்து சென்றனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாகர்கோவிலில் பரபரப்பு: மதுக்கடையை எதிர்த்து பெண்கள் போராட்டம்”

அதிகம் படித்தது