மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 13வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது



Dec 2, 2016

கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் துவங்கியது. துவங்கிய நாள் முதல் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

siragu-rajya-sabha

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று துவங்கியது. இதில் அவை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ரூபாய் நோட்டு விவகாரத்துடன், மத்திய அரசு மேற்கு வங்கத்தில் ராணுவத்தை நிறுத்தியது தொடர்பாகவும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்கட்சிகள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர்.

அமைச்சர் மனோகர் பாரிக்கர் ராணுவம் நிறுத்தப்பட்டதற்கான விளக்கம் அளித்தும் அதை ஏற்க மறுத்தனர் எதிர்கட்சிகள். எனவே தொடர்ந்து கூச்சல் குழப்பம் நீடித்ததால் லோக்சபா திங்கட்கிழமை வரை அவை ஒத்தவைக்கப்பட்டது.

இதைப் போலவே ராஜ்ய சபாவிலும் தொடர்ந்து ரூபாய் நோட்டு விவகாரத்துடன், மத்திய அரசு மேற்கு வங்கத்தில் ராணுவத்தை நிறுத்தியது தொடர்பாகவும் எதிர்கட்சிகள் அமளி ஏற்பட்டது. எனவே இந்த அவையும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 13வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது”

அதிகம் படித்தது