மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் 17வது நாளாக முடங்கியது



Dec 9, 2016

நவம்பர் 8ம் தேதி 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார் மோடி. இதன் காரணமாக பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது, மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

siragu-rajya-sabha

இந்நிலையில் சென்ற 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் துவங்கியது. துவங்கிய நாள்முதல் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும், இப்பிரச்சினைக்கு வாக்கெடுப்பு நடத்தி விவாதம் நடத்த வேண்டும் என்றும், பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டும் என்று எதிர்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் 17ம் நாளான இன்றும் ரூபாய் நோட்டு பிரச்சனைக்காக எதிர்கட்சிகள் இரு அவையிலும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து லோக்சபாவில் கூச்சல் அதிகமாக ஏற்பட்டதால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் டிசம்பர் 14ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் 17வது நாளாக முடங்கியது”

அதிகம் படித்தது