மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்



Feb 28, 2017

நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(28.02.17) போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Siragu bank stike

இப்போராட்டத்தில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, அரசுத்துறை வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் போன்ற வங்கிகளின் ஊழியர்களான பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கின்றனர். சில புதிய தனியார் வங்கிகள் இதில் பங்கேற்கவில்லை.

வாரத்தில் ஐந்து நாள் வேலை, செல்லாத நோட்டு அறிவிப்பின்போது வேலை செய்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை, அச்சமயம் இறந்த ஊழியர்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

வங்கிகளை தனியார்மயமாக்க முயற்சித்து வருவதை கைவிட வேண்டும், வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும் போன்ற பல்வேறு போராட்டங்களை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியுள்ளார்.

தற்போதுள்ள பிரச்சினை வாராக்கடன் தான். எனவே கடன் செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவசியம் என்று அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.ஹெச். வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்”

அதிகம் படித்தது