மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாட்டுப்பண் அறிவுறுத்தும் பண்பாடு

தேமொழி

Feb 19, 2022

siragu naattuppan1

அடக்குமுறையில் இருந்த தங்கள் நாட்டை மீட்க விரும்பும் குழுவினர் தங்கள் நாட்டில் அரசு ஒன்றை நிறுவ இயலாமல் போனாலும் அந்நிய மண்ணில் தற்காலிக அரசு (Provisional government) ஒன்றை நிறுவி உரிமையை மீட்கத் திட்டங்கள் வகுத்துப் போராடுவது வழக்கம். அவ்வாறு இந்தியாவின் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, இந்தியாவின் விடுதலைக்காக இருமுறை அந்நிய மண்ணில் தற்காலிக இந்திய அரசுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

முதல்முறை டிசம்பர் 1, 1915 அன்று ஆப்கானிஸ்தான் அரசின் உதவியுடன் ஆப்கானிஸ்தானில், ஜெர்மனி, ஜப்பான், குரோசியா, பர்மா, பிலிப்பைன்ஸ், துருக்கி போன்ற நாடுகளின் ஆதரவுடன் முதல் தற்காலிக அரசு முதலாம் உலகப் போர் காலத்தில் அமைந்தது. பிறகு ஆங்கிலேய அரசின் நெருக்கடியால் ஆப்கான் அரசு தனது உதவியை விலக்கிக் கொள்ள அந்த அரசு கவிழ்ந்தது.

பின்னர் சுமார் ஒரு கால் நூற்றாண்டிற்குப் பிறகு இரண்டாம் முறையாக இரண்டாம் உலகப் போரின் காலத்தில், அக்டோபர் 21, 1943ல் மீண்டும் இந்திய மண்ணில் ஆங்கில ஆட்சியை ஒழிக்க மற்றொரு தற்காலிக அரசு ஒன்றை அயலக மண்ணில், இம்முறை சிங்கப்பூரில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் சுபாஷ் சந்திரபோஸ் ‘ஆசாத் ஹிந்த்’ (Azad Hind Government: 21 October 1943 to 18 August 1945) அரசை நிறுவினார். இப்பொழுதும் ஜெர்மனி, ஜப்பான், குரோசியா, பர்மா, பிலிப்பைன்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் ஆதரவு அளித்தன. சுபாஷ் சந்திரபோஸ் அவர் தோற்றுவித்த ஆசாத் இந்தியா அரசுக்குத் தலைமை ஏற்று, செயலற்றுப் போய் இருந்த இந்தியத் தேசிய இராணுவம் என்ற விடுதலை இயக்கத்தின் படையை மீட்டெடுத்து, இங்கிலாந்திற்கு எதிராக போர் பிரகடனம் அறிவித்து இந்தியாவை மீட்கும் செயலைத் துவக்கினார். இருப்பினும் ஆதரவு தந்த ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் தோற்கடிக்கப்படவே சுபாஷ் சந்திரபோசும் அவரது தற்காலிக அரசும் இல்லாது மறையும் நிலை ஏற்பட்டது.

ஆசாத் ஹிந்த் அரசுக்கான வங்கி, பணம்(ஆசாத் இந்த் ரூபா), நீதிமன்றம், இராணுவம், பத்திரிக்கைகள், பல பள்ளிக்கூடங்கள் என ஓர் அரசுக்குரிய நிர்வாகப் பிரிவுகளை நிறுவியதோடு அதற்கான கொடியும் நாட்டுப் பண்ணும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. கர்னல் அபித் ஹசன் சஃபாரினி மற்றும் ஆசாத் ஹிந்த் வானொலியின் எழுத்தாளரான மும்தாஜ் ஹுசைன் (Colnel Abid Hassan Saffrani and Mumtaz Hussain) ஆகிய இருவரும், இரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய ‘ஜன கண மன’ பாடலை அடிப்படையாகக் கொண்டு ஹிந்துஸ்தானி (ஹிந்தி-உருது கலவை) மொழியில் அப்பாடலை மொழிபெயர்த்தனர். ‘சுப் சுக் சைன்’ என்று அறியப்படும் (Subh Sukh Chain Ki: https://youtu.be/WRgrmM_NBUo) அப்பாடலை ஆசாத் ஹிந்த் அரசுக்கான நாட்டுப்பண்ணாக அறிவித்தார் சுபாஷ் சந்திரபோஸ். இப்பாடலை மொழியாக்கம் செய்தவர் இருவரும் இசுலாமியர் என்பதும், சமஸ்கிருத மயமாக்கப்பட்டிருந்த வங்க மொழிப் பாடலை இவ்வாறு மாற்ற விரும்பிய சுபாஷ் சந்திரபோசும் ஒரு வங்காளிதான் என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்பாடலை ஒரு மொழியாக்கம் என்பதைவிட தாகூரின் பாடலைத் தழுவி எழுதப்பட்ட பாடல் என்று கூறப்படுவதும் உண்டு.

சுப் சுக் சைன் எனத் தொடங்கும் இப்பாடல் ‘குவாமி தரனா’ (Quami Tarana) என்றும் முன்னர் அறியப்பட்டது. கேப்டன் ராம் சிங் தாக்குரி (Captain Ram Singh Thakuri) இப்பாடலுக்கு இசையமைத்தார். ‘கடம் கடம் படேயா ஜாயே’ மற்றும் ‘சாரே ஜஹான் சே அச்சா’ (‘Kadam Kadam Badeya jaye’ and ‘Sare Jahan Se achha’) போன்ற மற்ற புகழ்பெற்ற பல தேசப்பக்தி பாடல்களுக்கும் இசையமைத்தவர் ராம் சிங் தாக்குரிதான். இவருக்கு இந்திய அரசு 2018 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது. இந்தியா விடுதலை பெற்ற நாளில் ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியப் பிரதமர் இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடியை செங்கோட்டையில் ஏற்றிய பொழுது ராம் சிங் தாக்குரியை இப்பாடலை இசைக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார், அவரும் தன் இசைக்குழுவினருடன் இப்பாடலை அன்று வாசித்தார்.

விடுதலை பெற்ற இந்தியாவிற்கான தேசிய கீதம் தேர்வு செய்யப்பட்ட பொழுது, சுபாஷ் சந்திரபோசின் ‘ஆசாத் ஹிந்த்’ அரசின் தேசியகீதத்தின் ‘இசைவடிவமே’ இந்தியாவின் வங்காள மொழியில் இருக்கும் தேசியகீதத்திற்கும் எடுத்தாளப்பட்டது. அண்மையில் தாகூரின் வங்காள மொழிப் பாடலுக்குப் பதில் ‘ஆசாத் ஹிந்த்’ அரசின் தேசியகீதத்தையே இந்தியாவின் தேசியகீதமாக வைப்பது சிறப்பாகவும், விடுதலை பெற்ற இந்தியாவிற்கு ஏற்றவகையிலும் இருக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுப்ரமணியம் சுவாமி இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தாகூரின் முழுப் பாடலையும் அனைவரும் அறிந்திருக்கும் மொழியில் தேசியகீதமாக அறிவிக்கப்படாத பிழையினால், இந்தியா விடுதலை பெற்ற 75வது ஆண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகும் சமய தீவிரவாத வல்லூறுகள் கல்விக்கூடங்களில் தனித்து வரும் சிறுபான்மைப் பிரிவு மாணவியிடம் கலகம் செய்யும் நிலையை நாடு எதிர்கொள்கிறது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையை அனைவரும் அறிந்திராத குற்றம் இது.

கீழுள்ள இந்துஸ்தானி பாடல் வடிவம் ‘ஹிஸ்டோரிக்கல் இந்தியா’ (https://historicalindia.org/article/subh-sukh-chain) தளத்திலிருந்தும், அதன் ஆங்கில மொழியாக்கம் ‘இண்டர்காஸ்ட் யூடியூப் சேனல்’ தளத்திலிருந்தும் பெறப்பட்டது.

சுப் சுக் சைன் பாடலின் இந்துஸ்தானி வடிவம்:

————————————————————————————

Subh sukh chain ki barkha barse,

Bharat bhaag hai jaaga.

Punjab, Sindh, Gujarat, Maratha,

Dravid, Utkal, Banga,

Chanchal sagar, Vindh, Himaalay,

Neela Jamuna, Ganga.

Tere nit gun gaayen,

Tujh se jivan paayen,

Har tan paaye asha.

Suraj ban kar jag par chamke,

Bharat naam subhaga,

Jai ho, Jai ho, Jai ho,

Jai, Jai, Jai, Jai ho.

Sab ke dil mein preet basaaey,

Teri meethi vaani.

Har sube ke rahne waale,

Har mazhab ke praani,

Sab bhed aur farak mita ke,

Sab god mein teri aake,

Goondhe prem ki mala.

Suraj ban kar jag par chamke,

Bharat naam subhaga,

Jai ho, Jai ho, Jai ho,

Jai, Jai, Jai, Jai ho.

Subha savere pankh pakheru,

Tere hi gun gayen,

Baas bhari bharpur hawaaen,

Jeevan men rut laayen,

Sab mil kar Hind pukare,

Jai Azad Hind ke nare.

Pyaara desh hamara.

Suraj ban kar jag par chamke,

Bharat naam subhaga,

Jai ho, Jai ho, Jai ho,

Jai, Jai, Jai, Jai ho.

~~~

சுப் சுக் சைன் பாடலின் ஆங்கில மொழியாக்கம்:

————————————————————————————

Rested with auspicious happiness

India has awoken.

Punjab, Sindh, Gujarat, Maratha,

Dravida, Utkala, Vanga

From the roaring waves to the Vindhya,

The Himalayas, the blue Yamuna and Ganges.

We sing your praises, you enlighten us,

You give everyone hope.

Shining over the world like the sun

Is the good name of India.

Victory to thee! Victory to thee! Victory to thee!

Victory, Victory, Victory, Victory to thee!

Your sweet voice is kind to every heart,

To people of every province,

To people of every religion.

Putting aside our differences,

We come to your embrace,

Making a garland of love.

Shining over the world like the sun

Is the good name of India.

Victory to thee! Victory to thee! Victory to thee!

Victory, Victory, Victory, Victory to thee!

Awakened with auspicious wings,

We sing your praises,

When the morning air makes you lively,

All together we call upon the nation,

With the slogan of “Long live Free India.”

To our dear country.

Shining over the world like the sun

Is the good name of India.

Victory to thee! Victory to thee! Victory to thee!

Victory, Victory, Victory, Victory to thee!

~~~

சுப் சுக் சைன் பாடலின் தமிழ் மொழியாக்கம்:

————————————————————————————

புகழ்மயக்க மகிழ்வில் ஓய்ந்திருந்த

இந்தியா இன்று விழித்தது

பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம்,

திராவிட, உத்கல, வங்கா

ஆர்ப்பரிக்கும் கடல் முதல் விந்தியம்,

இமயம், நீல யமுனை மற்றும் கங்கை வரை

நாங்கள் உன் புகழ் பாடிட, நீ எங்களுக்கு அறிவூட்டி

அனைவருக்கும் நம்பிக்கையூட்டுவாய்

உலகின் மேல் ஒளிரும் சூரியன் போல்

இந்தியாவின் புகழ் எங்கும் பரவும்

உனக்கே வெற்றி! உனக்கே வெற்றி! உனக்கே வெற்றி!

வெற்றி, வெற்றி, வெற்றி உனக்கே!

உன் இனிய குரல் அனைவர்

மனதிலும் அன்பை அளிக்கும்

அனைத்து மாநிலத்தவரும்

அனைத்து மதத்தினரும்

வேற்றுமைகள் நீக்கி

நாங்கள் உன் அணைப்பில் அடங்குவோம்

அன்பு மாலை சூட்டுவோம்

உலகின் மேல் ஒளிரும் சூரியன் போல்

இந்தியாவின் புகழ் எங்கும் பரவும்

உனக்கே வெற்றி! உனக்கே வெற்றி! உனக்கே வெற்றி!

வெற்றி, வெற்றி, வெற்றி உனக்கே!

மங்கலச் சிறகால் துயிலெழுந்து

உன் புகழை நாங்கள் பாடுவோம்

காலைக் காற்றில் நீ உயிர்த்தெழ

நாட்டினை நாம் வாழ்த்துவோம்

சுதந்திர இந்தியா வாழ்கவென முழங்குவோம்

நாட்டிற்கு அன்பு பாராட்டுவோம்

உலகின் மேல் ஒளிரும் சூரியன் போல்

இந்தியாவின் புகழ் எங்கும் பரவும்

உனக்கே வெற்றி! உனக்கே வெற்றி! உனக்கே வெற்றி!

வெற்றி, வெற்றி, வெற்றி உனக்கே!

மொழியாக்கம்: தேமொழி

~~~

சுபாஷ் சந்திரபோசின் வாழ்க்கை வரலாறு வங்காள மொழித் திரைப்படமாக அண்மையில் வெளியான ‘கும்னாமி’ (Gumnaami- 2019) என்ற பெயரில் வெளியான பொழுது, அப்படத்தில் இப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டது (பார்க்க:https://youtu.be/RL7haZUtg6k).

________________________________________________________________

References:

[1] Subh Sukh Chain Ki – With Auspicious Happiness | Anthem of Free India

Interkast Youtube Channel: https://youtu.be/WRgrmM_NBUo

[2] How – and Why – ‘Jana Gana Mana’ Became India’s National Anthem; Netaji Subhash Chandra Bose, who was instrumental in making it the anthem of the INA, particularly appreciated its pan-India and secular reach.

https://thewire.in/history/independence-day-national-anthem-jana-gana-mana-subhash-chandra-bose-netaji

[3] Capt. Ram Singh Thakuri – A Gorkha Icon, Jyoti Thapa Mani

https://thedarjeelingchronicle.com/special-article-capt-ram-singh-thakuri/

[4] Subh Sukh Chain

https://historicalindia.org/article/subh-sukh-chain

[5] Ram Singh Thakur The man behind Jana, Gana, Mana…tune

https://youtu.be/jdm48ltGdpA

[6] Replace words of Tagore’s ‘Jana Gana Mana’ with Netaji’s INA version — Swamy writes to PM

https://theprint.in/india/replace-words-of-tagores-jana-gana-mana-with-netajis-ina-version-swamy-writes-to-pm/555451/

[7] Subh Sukh Chain

https://en.wikipedia.org/wiki/Subh_Sukh_Chain


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாட்டுப்பண் அறிவுறுத்தும் பண்பாடு”

அதிகம் படித்தது