மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாளை முதல் சுங்கச்சாவடியில் புதிய விதிகளுடன் கட்டணம் வசூலிக்கப்படும்



Dec 1, 2016

500,1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததிலிருந்து சுங்கச்சாவடிகளில் சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக நவம்பர் 11 வரை சுங்கக்கட்டணம் கிடையாது என்று அறிவித்தது மத்திய அரசு.

siragu-tollgate

அதன் பின் இந்த சில்லறைத் தட்டுப்பாடு நீடித்ததால் நவம்பர் 14 வரையிலும், பின் டிசம்பர் 2 வரையிலும் நீடிக்கப்பட்டிருந்தது. இந்த தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில் நாளை முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

சுங்கக்கட்டணம் செலுத்தும் பொழுது ரூ. 200க்கு மேல் செலுத்துவதாக இருந்தால் மட்டுமே பழைய 500 ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், ரூ.200க்கு கீழ் கட்டணம் இருந்தால் சில்லறையாகக் கொடுக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

தற்போது ரூ.2000 மட்டுமே அதிகமாகக் கிடைக்கும் நிலை உள்ளதால் சுங்கச்சாவடிகளில் கூட்டம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாளை முதல் சுங்கச்சாவடியில் புதிய விதிகளுடன் கட்டணம் வசூலிக்கப்படும்”

அதிகம் படித்தது