மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நீதிமன்றங்களில் தேசிய கீதம் கட்டாயமாக்க வேண்டும் என்ற மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி



Dec 2, 2016

நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் படக்காட்சி துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு இசைக்கப்படும் பொழுது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

siragu-supreme-court

மேலும் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மீறும் சினிமா திரையரங்குகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற ஒரு போது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. இம்மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் இம்மனுவை தள்ளுபடி செய்தது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீதிமன்றங்களில் தேசிய கீதம் கட்டாயமாக்க வேண்டும் என்ற மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி”

அதிகம் படித்தது