மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நூறு ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது



Dec 27, 2016

கூகுள் நிறுவனத்துடன் ரயில்வே துறை இணைந்து இந்த வருட இறுதிக்குள் மக்கள் அதிகமாகக் கூடும் நூறு ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி நூறு ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது.

siragu-free-wifi

அதில் மும்பை, புவனேஸ்வர், ஹவுரா, பெங்களூர், மதுரா, கான்பூர், பெய்ரேலி, அலிகார்க் மற்றும் வாரணாசி உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக மும்பை ரயில் நிலையமும், தொடர்ந்து நூறாவதாக கேரள மாநிலத்தின் கொல்லம் ரயில் நிலையத்திலும் வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அடுத்த வருடத்திற்குள் நானூறு ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி செய்யப்படும் என்று ரயில்வேதுறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நூறு ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது”

அதிகம் படித்தது