மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களின் நேர்காணல்

சிறகு சிறப்பு நிருபர்

Jun 27, 2015

senthil nathan profleFI2

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்: வணக்கம், நான் இப்பொழுது ஆழி பதிப்பகம் என்ற பதிப்பகத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன். Langscape என்ற ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனத்தையும் நடத்திக்கொண்டிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் என்னுடைய பொது செயல்பாடுகளாக, மக்கள் இணையம் என்கிற அமைப்பில் ஒருங்கிணைப்புக் குழுவில் நான் இருக்கிறேன். ஒரு புதிய அரசியல் அமைப்பு இது. எங்களைப் போன்ற பல்வேறு அரசியல் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய தமிழ் மொழியுரிமை கூட்டியக்கம் என்கிற கூட்டமைப்பில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன்.

என்னைப்பற்றி சொல்வதென்றால் நான் இப்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி என்கிற ஊருக்கு அருகில் உள்ள தேவிகாபுரம் என்கிற கிராமத்தில் பிறந்தேன். நான் இளங்கலை அறிவியல் பட்டத்தை இயற்பியலில், செய்யாறு கலைக்கல்லூரியில் முடித்துவிட்டு, 90களின் துவக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் பட்டப்படிப்பை முடித்தேன். அதன்பிறகு தொடர்ச்சியாக இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளிலும், சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் ஒரே சமயத்தில் பத்திரிகையாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வந்திருக்கிறேன். 2000க்குப் பிறகு முழுக்க தமிழில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களில் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு அல்லது உள்மயமாக்கம் (localization) தொடர்பான பணிகளில், தனிப்பட்ட முறையிலும் ஒரு நிறுவனத்தின் தலைவர் என்கிற முறையிலும் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறேன்.

2007ல் ஆழிப்பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் துவங்கி இதுவரையிலும் கிட்டத்தட்ட நூறு தலைப்புகள் வெளியிட்டு இருக்கிறோம். அதில் அரசியல், கலாச்சாரம், வரலாறு, உலகளாவிய விடயங்கள் தொடர்பாக பல நூல்களை வெளியிட்டிருக்கிறோம். கவிதை, நாவல்கள், சிறுகதைகளில் சிறந்த நூல்களை வெளியிட்டிருக்கிறோம். ஈழம்,சுற்றுச்சூழல் போன்ற முக்கியமான அரசியல் களங்களை தொட்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் தமிழ் ஆழி என்று குறுகிய காலமே வந்த ஒரு பத்திரிகையின் பதிப்பாளராகவும், ஆசிரியராகவும் நான் இருந்திருக்கிறேன். கணித்தமிழ் தொடர்பாகவும் தொடர்ச்சியாக பதினைந்து ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறேன். 90களின் இறுதியில் தமிழின் முதல் இணைய இதழ்களில் ஒன்றான கணியன்.காம் என்கிற தளத்தின் ஆசிரியராக இருந்தது முதல், இன்றுவரை பல அனுபவங்களை அவற்றினூடாக பெற முடிந்திருக்கிறது. என்னுடைய பின்னணி என்று பார்க்கும் பொழுது இதழியல், மொழிசார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகள் எல்லாமே கலந்த ஒன்றுதான், அதுமட்டுமல்லாமல் எப்பொழுதுமே ஒரு அரசியல் – சமூகத்தளத்தில் செயல்பட்டு வந்திருக்கிறேன்.

என்னுடைய மாணவர் பருவம் முழுக்கவும் அரசியல் வாழ்க்கைதான். தமிழ் மக்களுக்கு முக்கியமான அரசியல் பிரச்சனைகளாக இருந்த எல்லா பிரச்சனைகளிலும் நாங்கள் தலையிட்டு இருக்கிறோம். அது சமூக நீதிக்கானப் போராட்டமாக இருந்தாலும் சரி, ஈழ ஆதரவுக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, நம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, தமிழக மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பது தொடர்பான போராட்டங்கள், செயல்பாடுகள், கள செயல்பாடுகள், அறிவுசார்ந்த செயல்பாடுகளில் தொடர்ச்சியாக இல்லை என்றாலும், விட்டு விட்டு செயல்பட்டு வந்திருக்கிறேன். இடையில் நீண்ட காலம் பங்கேற்பின்றியிருந்தேன். ஆனால் 2013க்குப் பிறகு தீவிரமாக அரசியல் செயல்பாடுகளில் இறங்கி செயல்பட்டு வந்துகொண்டிருக்கிறேன்.

மக்கள் இணையம் என்ற அமைப்பின் சார்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2014ல் நடந்த பொதுத்தேர்தலில் ஆரணி தொகுதியில் நான் போட்டியிட்டேன். அந்தத் தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமிழக மக்களுக்கான மாற்று அரசியலை முன்வைத்து செயல்படுவதற்காக நாங்கள் செயல்பட்டிருக்கிறோம். இப்பொழுது என்னுடைய செயல்பாடுகள் முழுக்க முழுக்க தமிழகத்திற்கு ஒரு தன்னாட்சி உரிமையைப் பெற்றுத் தரக்கூடிய செயல்பாடாக இருந்து கொண்டிருக்கிறது. அதனுடைய ஒரு பகுதியாகத்தான் மொழி சார்ந்த களத்தில் செயல்பாட்டை துவங்கியிருக்கிறோம். அதனுடைய ஒரு வெளிப்பாடுதான் இந்த தமிழ்மொழி உரிமை கூட்டியக்கம்.

கேள்வி: மொழிப்போராட்டம் துவங்கி ஐம்பது ஆண்டுகளாகிவிட்டன. மொழி  உரிமைக்காக இன்னும் போராடவேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். ஏன் இந்த நிலை?

பதில்: 1937,1938-களில் துவங்கி தமிழ்நாட்டில் மொழிப்போராட்டம் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது. ஐம்பதுகளில் நடைபெற்றிருக்கிறது, நாற்பதிலும் நடைபெற்றிருக்கிறது, அறுபதில், அறுபத்து இரண்டில், அறுபத்து மூன்று, அறுபத்து நான்கு, அறுபத்து ஐந்து என்று தொடர்ச்சியாக நடந்தன. அதன்பிறகும் கூட எப்போதெல்லாம் மத்திய அரசு இந்தியை இங்கே திணிக்கிறதோ, அப்போதெல்லாம் நாம் அதற்கு எதிராக செயல்பட்டு வந்திருக்கிறோம். சடங்குத்தனமாகவாவது ஜனவரி 25 ஐ ஒரு மொழித் தியாகியர் நாளாக கடைப்பிடித்துவந்திருக்கிறோம். மொழிப்பிரச்சனை என்பது, அடிப்படையில் முக்கால் நூற்றாண்டைக் கடந்த ஒரு பிரச்சனை. இதில் குறிப்பாக இந்த ஆண்டு 2015ஐ நாம் ஒரு முக்கியமாகக் கொண்டு செயல்படுவதற்குக் காரணம், 1965ல் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் ஐம்பதாவது ஆண்டு இது என்பதால் இந்த 2015-ஐ தமிழ் மொழி உரிமைக் கூட்டியக்கத்தின் சார்பாக ஒரு மொழி உரிமை ஆண்டாக பிரகடனப்படுத்தி பல்வேறு செயல்பாடுகளில் இறங்கியிருக்கிறோம்.

senthilnathan11965ல் இந்தி எதிர்ப்புக்கு எதிரான போராட்டத்தினுடைய நோக்கம் என்று பார்த்தீர்கள் என்றால் அதற்கு ஒரு உடனடியான நோக்கம் இருந்தது, அதாவது இந்தியா குடியரசாக மாறிய 1950-ல் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியும், துணை ஆட்சி மொழியாக ஆங்கிலமும் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது. இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்பதுதான், இந்தியாவில் இருக்கக்கூடிய இந்தி மொழி பேசக்கூடிய மக்களினுடைய அரசியல் பிரதிநிதிகள் இந்திய அரசியல் சாசன உருவாக்க சபையில் அதன் பிறகு பாராளுமன்றத்தில், பொது வெளியில், அரசியலில் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிற ஒரு விடயம். அந்த ஒற்றைமொழி ஆதிக்கத்திற்காக நாம் தொடர்ந்து அதை எதிர்த்துப் போராடி வந்திருக்கிறோம். அதனால் இந்தியா குடியரசான 1950 இல் இந்தி ஆதிக்கவாதிகள் ஆங்கிலத்திற்கு சிறிது இடம் கொடுத்திருந்தார்கள். ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழியாக இருந்தது.. இந்தியும் சரி, ஆங்கிலமும் சரி எப்போதும் இந்தியாவின் தேசிய மொழிகள் கிடையாது, இந்தியாவின் பொது மொழியும் கிடையாது, அது இந்திய அரசாங்கத்தின் அலுவல் மொழிகளே அவை. இந்தி என்பது இந்திய அரசாங்கத்தின் அலுவல் மொழி. அவ்வளவுதான். ஒரு பதினைந்து ஆண்டுகாலம் ஆங்கிலம் தொடர்ந்து இந்தியோடு சேர்ந்து ஒரு இணை ஆட்சிமொழியாக இருக்கட்டும், பதினைந்து வருடத்திற்குப் பிறகு ஆங்கிலம் முழுமையாக அகற்றப்பட்டு இந்தி மட்டுமே இந்தியாவினுடைய ஒரே அலுவல் மொழியாக, ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்ற திட்டம் அவர்களுக்கு 1950 இல் இருந்தது.

ஆக அந்த பதினைந்தாவது ஆண்டு என்பது, 1950ல் இந்தியா அரசியல் சாசனத்தை ஏற்று குடியரசு நாடாக மாறியதிலிருந்து பதினைந்து ஆண்டுகாலம் என்பது, 1965 ஆம் ஆண்டு. ஆக 1965ல் ஆங்கிலம் முழுமையாக அகற்றப்பட்டு, இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்கின்ற நிலைமை வந்தாக வேண்டும் என்பதுதான் இந்தி வெறியர்களின் நிலைப்பாடு. 1962-லிருந்தே தமிழ்நாட்டில் பதற்றம் உருவாக ஆரம்பித்தது, அப்பொழுதுதான் நேரு, எந்தவிதமானசட்டப்பூர்வமான அங்கீகாரமும் இல்லாத ஒரு பொய்யான ஒரு வாக்குறுதியைக் கொடுத்தார். இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையில் அவர்கள் மீது இந்தி திணிக்கப்படாது என்ற ஒரு கருத்தைச் சொன்னார். அதை வாக்குறுதி என்று நாம் ஏற்றுக்கொண்டோம். நாம் என்று சொல்வது, அப்போது தமிழகத்தில் மிக பலமாக இருந்த திராவிட இயக்கத்தினுடைய தலைவர்கள் – குறிப்பாக தி.மு.க. தலைவர்கள். அவர்கள் நேரு சொன்னதை ஒரு பெரிய வாக்குறுதி என்று நினைத்துக்கொண்டு இருந்தார்கள். இன்றும்கூட அதை அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 1965 வரும் பொழுது நேருவும் உயிரோடு இல்லை,

இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக ஆகும் என்ற நிலைமை வரக்கூடிய அந்த தருவாயில்தான் அந்தப் போராட்டம் வெடித்தது. தமிழ்நாட்டில் எல்லா பகுதியிலும் இருக்கக்கூடிய மக்கள், எல்லா சமூகங்களையும், சாதிகளையும், மதங்களையும், இன்னும் சொல்லப்போனால் மொழி ரீதியாக வெவ்வேறு மொழிகளை தாய்மொழியாக உடையவர்களும்கூட, இணைந்து போராடித்தான் 1965ல் மத்திய அரசாங்கத்தினுடைய அந்த ஆதிக்க எண்ணம் நிறைவேறவிடாமல் நாம் தடுத்து நிறுத்தினோம். மாணவர்களும் மக்களும் சேர்ந்து போராடிய அந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். சிலர் 700 பேர் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள், சிலர் 500 பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்கிறார்கள். ஒரு சிலர் பொள்ளாச்சியில் மட்டுமே 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். பல்வேறு விடயங்கள் உண்மையிலேயே பதிவுசெய்யப்படவில்லை என்பதுதான் வேதனையான விடயம்.

senthilnathan5எந்த மொழிப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததோ, அந்த மொழிப்பிரச்சினையை அது கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட்டது. முதலில் அந்த கட்சியோ, அந்தக் காலகட்டத்தில் இருந்த தலைவர்களோ, அறிஞர்களோ, தமிழறிஞர்களோகூட, 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினுடைய முழு வீச்சை ஒரு வரலாற்றுப் பதிவாக, ஒரு இலக்கியப் பதிவாக, ஒரு சாட்சியப் பதிவாக முழுமையாக பதிவுசெய்யவில்லை. அவரவர் தங்களுடைய ஈடுபாட்டின் அடிப்படையில் சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள், நூல்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் முழுமையான வரலாறு என்பது பதியப்படாத நிலையில்தான் இருக்கிறது. ஆக இப்படிப்பட்ட நிலையில் 1965 போராட்டம் என்பது நவீன கால தமிழர்கள் வரலாற்றில் என்பது மிக முக்கியமான போராட்டம். அது பெரியதொரு மக்கள் போராட்டம். நாம் அறிந்தவரையில் கடந்த ஐம்பது ஆண்டுகளில், ஏன் இருபதாவது நூற்றாண்டு முழுக்கவே வெகுசில போராட்டங்கள்தான் மகத்தான மக்கள் போராட்டங்களாக மாறியிருக்கின்றன. அதில் முகாமையான போராட்டம் என்பது 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான ஒரு போராட்டம்.

1965 போராட்டத்தினுடைய உடனடி இலக்கு இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்பதை எதிர்ப்பதுதான். ஆனால் அந்தப் போராட்டத்தினுடைய நோக்கம், உள்நோக்கம் என்ன?, அந்தப் போராட்டத்தினுடைய ஆத்மா எதைச் சுற்றிவந்தது? எதற்காக நமது இளைஞர்கள் தீக்குளித்தார்கள், நஞ்சருந்தினார்கள், குண்டடிப்பட்டுச் செத்தார்கள்? எதற்காக போர்ப் பரணி பாடி தமிழகத்தை தீப்பற்றவைத்தார்கள்? எதற்காக உலகின் மிகப்பெரிய மொழிப்போராட்டம் ஒன்று வரலாற்றில் இடம்பெற்றது? இந்தியின் இடத்தில் ஆங்கிலம் அமரவேண்டும் என்பதற்காகவா? தமிழ் ஆள வேண்டும் என்பதுதான், தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும் என்பதுதான் அந்தப் போராட்டத்தின் உட்கிடக்கை. அது நடந்ததா?

1964,65-லேயே தி.மு.க.வின் அன்றைய தலைவர், முன்னாள் முதல்வர் அண்ணா கூட நாடாளுமன்றத்தில் தங்களுடைய இலக்காகச் சொன்னது தமிழ் உட்பட அரசியல் சாசனத்தின் எட்டாம் பிரிவில் இருக்கக்கூடிய அனைத்து மொழிகளும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவேண்டும் என்பதுதான். ஆனாலும் கூட அவர்கள் ஆட்சி பீடம் ஏறிய பிறகு, அந்த இலக்கை நிறைவேற்ற உருப்படியாக எதையும் செய்யவில்லை சட்டப்பூர்வமாக அரசியல் சாசன ரீதியாக எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு முழக்கமாகத்தான் இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்கிற முழக்கம் இருந்ததே ஒழிய நிர்வாக ரீதியாக, சட்டரீதியாக, அரசியல் சாசன ரீதியாக தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியில் ஒன்றாக ஆக்குவது, தமிழ்நாட்டிலே அனைத்துப் புலங்களிலும்  – அதாவது தனியார் துறையில், கல்வியில், பொதுத்துறை, வணிகத்துறை என்று எல்லா இடங்களிலும்- தமிழை ஆட்சிமொழியாகவும், பொது மொழியாகவும், பயன்பாட்டு மொழியாகவும் மாற்றுவது என்பதற்கான பெரிய வேலைகள் எதுவும் அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு செய்யவில்லை. அதனால் 1965 போராட்டத்தினுடைய, அந்த உடனடி இலக்காக இருந்த ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்கவேண்டும் என்கிற ஒரு விடயத்தையே, தமிழ்நாடு தன்னுடைய மொழிக்கொள்கையாக மாற்றிக்கொண்டதோ என்கிற அச்சம் பிறகு வந்த பல தமிழர்களுக்கு இருந்தது.

அதாவது இந்தி வேண்டவே வேண்டாம், ஆனால் எல்லாமே ஆங்கிலம்தான் என – ஒரு அடிமைத்தனத்திற்கு பதிலாக இன்னொரு அடிமைத்தனத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அந்த ஏமாற்றுக் கொள்கையே திராவிடக்கட்சிகளின் மொழிக்கொள்கையாக தொடர்ந்து இங்கே நீடித்துவருகிறது. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. யார் ஆங்கிலத்தை வேண்டாம் என்றார்கள்? அது வேண்டும்தான். நாம் நன்றாக அதில் புலமைப்பெறவும், அதை பயன்படுத்துவும் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அது எப்படி தமிழகத்தின் அதிகார மொழியாக, சமூக மொழியாக, வணிக மொழியாக, கல்வி மொழியாக ஆகிவிடமுடியும்?

தமிழை ஒரு அடையாளத்திற்கான, கலாச்சாரத்துக்கான குறியீடாக, வெறும் வரலாற்றுக் குறியீடாக மட்டும் வைத்து தமிழ், தமிழன், தமிழினம் போன்ற விடயங்களை வாக்கு வங்கிக்கான அரசியலாக மாற்றினார்கள் திராவிட கட்சியினர். தமிழ் காண்டுமிராண்டி மொழி என்பது ஏன், மொழித் தொல்லை என்று தலைப்புகளிட்டு புத்தகம் போட்டு விற்றார்கள் பெரியாரிய அமைப்பினர். வேறு எந்த சமூகத்திலும் இப்படியொரு அநியாயம் நிகழ்ந்திருக்காது. சாதி ஒழிப்பு விஷயத்திலும் ஆணாதிக்க ஒழிப்பு விஷயத்திலும் இவர்கள் பெரியாரைப் பின்பற்றவில்லை. அங்கே சாதி வெறியர்களாகவும், ஆணாதிக்க கலாச்சாரவாதிகளாகவுமே இவர்கள் தொடர்ந்தார்கள். ஆனால் தமிழ் ஒழிப்பு விஷயத்தில்மட்டும் இழை பிசகாமல் பெரியாரைப் பின்பற்றினார்கள்.

mukilan nerkaanal41965க்குப் பிறகும் கூட இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் என்பது அவ்வப்போது நடந்துவந்தாலும் கூட ஒரு எதிர்மறையான போராட்டமாகத்தான் மொழிப்போராட்டம் இருந்திருக்கிறதே ஒழிய நமக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கான சட்டங்களையும், திட்டங்களையும், கொள்கைகளையும், திட்டமிடுதலையும் உருவாக்குவதற்கான ஒரு சூழலாக அது மாறவே இல்லை என்பதை வேதனையோடு, வருத்தத்தோடு, ஏன் சற்று கோபத்தோடும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு வந்த அத்தனை ஆட்சியாளர்களும் கூட தமிழ்நாட்டை முழுக்க முழுக்க ஆங்கில மயப்படுத்தினார்களே ஒழிய, தமிழ்நாட்டை தமிழ் மயப்படுத்தவில்லை என்று நாம் சொல்லலாம். இப்படி நாம் சொல்வது என்பது அதாவது தமிழ்நாட்டில் ஆங்கிலமே இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் இல்லை என்பதை நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.

நவீன காலத்தில் எல்லா சமூக நிலைகளிலுமே இதுவரையிலும் ஒற்றை மொழியை மட்டும் கொண்டிருந்த சமூகங்களுமே கூட காலஓட்டத்தில் குறிப்பாக உலகமயக்கல் காலகட்டத்தில் ஆங்கிலத்தைப் படிக்கவேண்டிய ஒரு சூழலுக்கு வந்திருக்கும் பொழுது, ஆங்கிலத்தை முழுமையாக புறக்கணிக்கவேண்டும் என்பதோ, அதை ஒதுக்கி விடவேண்டும் என்பதோ, நம்முடைய கோரிக்கை கிடையாது. அல்லது இந்தியா போன்ற பல மொழிகள் பேசுகிற ஒரு நாட்டில் எல்லா மொழிகளும் ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டாலும் கூட, இணைப்பு மொழியாக ஆங்கிலம்தான் இருந்தாக வேண்டிருக்கிறது. இந்த யதார்த்தைத்தையும் உண்மையையும்கூட நான் மறுக்கவில்லை. உலகத்தினுடைய தேவைக்காக மட்டுமல்ல, அனைத்திந்திய அளவிலான தேவைக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டு அளவிலும்கூட ஆங்கிலத்திற்கு ஒரு முக்கியமான இடம் இருக்கும் என்பதை மறுக்கவில்லை. ஆனால் எனது மொழி நாட்டை ஆளும் மொழியாக இருக்கவேண்டும், எனது மொழியின் அடிப்படையில் இந்த நாட்டினுடைய அரசும், நிர்வாகமும், பொது செயல்பாடுகளும், வணிக செயல்பாடுகளும் பண்பாட்டு செயல்பாடுகளும், கல்வி செயல்பாடும், குழந்தைகளினுடைய மனவளர்ச்சியும் நமது ஒட்டுமொத்த இலக்கிய வளர்ச்சியும் இருக்கவேண்டும் என்று சொன்னால்.அது நிச்சயமாக மொழி வெறி அல்ல.

1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தினுடைய முழு உண்மையை இன்னும் நாம் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். நான் இரண்டு விடயங்களை சொல்ல விரும்பிகிறேன். அந்தப் போராட்டம் தமிழ்நாட்டிலே தமிழ் மக்களால் நடத்தப்பட்டாலும் கூட இந்தியா முழுக்க இருக்கக்கூடிய இந்தி பேசாத மக்களினுடைய உணர்வுகளையும் பிரதிபலித்த போராட்டம்தான்அது. அதை நாம் மறந்துவிடவேண்டாம். இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில் என்ன நடந்தது என நம் எல்லோருக்கும் தெரியும். இந்திக்கு ஆதரவாகவும், இந்திக்கு எதிராகவும் அங்கே வாக்குகள் சரிபாதியாக பிரிந்து நின்ற போது, தன் வாக்கை அந்த அவையின் தலைவர் இந்திக்கு ஆதரவாக போட்டதன் மூலமாக இந்தி ஆட்சி மொழியாக்கப்பட்டது. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதற்கு எதிராக வாக்களித்த அத்தனை பேரும் தமிழர்கள் அல்ல, தமிழர்களும் வாக்களித்தார்கள். ஆனால் இந்தி பேசாத மாகாணங்கள் சேர்ந்த மற்ற பகுதி மக்களும் வாக்களித்தார்கள். 1965 இல் இந்தியாவில் இருக்கக்கூடிய இந்தித் திணிப்புக்கு எதிரான அத்தனை பேரின் மனநிலைகளையும் சேர்த்துத்தான் தமிழக மக்கள் அங்கே போராடினார்கள்.

senthilnathan3இந்தப் போராட்டத்திற்கு ஒரு அனைத்திந்திய அளவிலான ஒரு தாக்கமும், ஒரு நோக்கமும் இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே இந்தியாவில் உள்ள இந்தி பேசாத பிற இன மக்களோடு இணைந்து நமது உரிமையை வெல்வதற்கான ஒரு தேவையும் இன்று இருக்கிறது. 1965 இல் அந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தை நாம் நடத்தியிருக்காவிட்டால், ஒருவேளை ஆங்கிலத்தின் மூலமாக – ஆங்கிலத்தை மூலதனமாக வைத்துக் கொண்டிருப்பதன் மூலமாக -கடந்த முப்பது ஆண்டுகளில், தகவல்தொழில்நுட்ப துறையில், BPO துறையில், பல்வேறு வளர்ச்சியடைந்த தொழில்துறைகளில் இந்தியா அனுபவித்து வருகிற இந்தப் பல்வேறு மாற்றங்கள் எதுவுமே சாத்தியமில்லாமல் போயிருக்கும். ஆக ஒரு விதத்தில் ஆங்கிலத்தை தக்கவைப்பதன் மூலமாக இன்றைய இந்தியாவின் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியதில் நம்மவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு பரந்த, சமூக அளவிலான, பொருளாதார அளவிலான, அரசியல் அளவிலான தாக்கம் இருக்கிறது. அதை இன்னும் நாம் புரிந்துகொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்.

இந்த அடிப்படையில் மொழிப் பிரச்சினையின் பொருளாதார அம்சத்தை நாம் மீண்டும் பேசத் தொடங்கவேண்டும். அதன் மூலமாக உருவாகிற அரசியல் அதிகாரத்தைப் பற்றி பேசவேண்டும். தமிழ்த் தாயை காப்பதற்கான போராட்டமாக மட்டுமே மொழிப் பிரச்சினையைச் சித்தரித்து, தமிழ்த் தாயையும் காப்பாற்றாமல், அந்த இடத்தில் ஆங்கிலத்தைக் கொண்டு உட்காரவைத்துவிட்டுவிட்டோம். இந்தி அரக்கிக்கு எதிரான போராட்டம், இந்தி அரக்கிக்கு எதிரான போராட்டம் என்று சொல்லி இறுமாந்து போனோம். அதுதான் தலைவர்களுக்கு செளகரியமானது. அவர்களுக்கு உண்மையில் சுலபமான இலக்காக அந்த இந்தி அரக்கி என்கின்ற ஓர் இலக்கு உருவாகிவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

தமிழ் வாழ்க என்கிற முழக்கமும், தமிழ் வெல்க என்கிற முழக்கமும், தமிழை ஆட்சிமொழியாக ஆக்கும் முழக்கமாக இல்லாமல் எப்போதோ ஒருமுறை, ஏதோ ஒரு இடத்தில் சென்று இந்தி எழுத்துகளை தார் பூசி அழிக்கக்கூடிய ஒரு அடையாள முழக்கமாக ஆக்கப்பட்டுவிட்டன. இதை இந்த ஐம்பது ஆண்டுகளில் நடந்த பெரிய ஒரு வீழ்ச்சி என்றுதான் நான் நினைக்கிறேன். அதனால்தான் பெருவாரியான மக்கள் கூட இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் முழு உண்மையை தெரிந்துகொள்ளாமல் “நாம் கூடுதலாக ஒரு மொழியைப் படிக்கிறோம், அந்த மொழியைப் படிப்பதற்குத் தடுக்கிறார்களே” என்ற பேசும்படி ஆகிவிட்டது. இந்தி படிக்காத்தால்தான் நாம் கெட்டுப்போனோம் என்று சொல்கிற ஒரு பெரிய கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது.

எந்த ஒரு வளர்ந்த சமூகத்திலேயுமே மாணவர்களும் சரி, மக்களும் சரி தங்கள் தேவைக்காக எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கவேண்டும் என்றால் அவர்கள் படித்துக் கொள்வார்கள், அதற்கான வசதியை உருவாக்கிக் கொடுப்பதும் கூட அரசாங்கத்தின் கடமைதான். ஆனால் இவர்கள் மக்களிடம் என்ன சொல்லியிருக்க வேண்டும்? தமிழ் ஆட்சி மொழியாக இருந்தால் மட்டும்தான், தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசாங்கத்தின் அலுவலகங்களில் கூட தமிழ் ஆட்சிமொழியாக இருந்தால்தான், தமிழ்நாட்டிலுள்ள பன்னாட்டு நிறுவனத்தினுடைய உள்ளுர் செயல்பாடுகளிலே தமிழ் நிச்சயமாக பயன்படுத்தப்பட்டால்தான், அங்கே நமக்கான வேலைவாய்ப்பு உறுதிபடும், அங்கே நமக்கான தொழில்வாய்ப்பு உறுதிப்படும். அந்த இடத்தில் தமிழ்நாட்டினுடைய செல்வாக்கு என்பது உறுதிப்படுத்தப்படும் என்பதையெல்லாம் சொல்லியிருக்கவேண்டும். அதுதானே உலக அனுபவம்?

ஐரோப்பிய நாடுகளில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அவரவர் மொழியை ஆட்சி மொழியை கட்டாயமாக வைக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுக்கு ஆங்கிலத்தின் அருமை பெருமை தெரியாமலா தங்கள் மொழிகளை அந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள்?தங்களுடைய தாய்மொழியிலேயே, பிறந்ததிலிருந்து பேசக்கூடிய தங்களுடைய முதல் மொழியிலேயே அனைத்தையும் கற்று எல்லா  விதமான பணிகளையும் பதவிகளையும் அடையமுடியும், எல்லாவிதமான தொழிலையும் செய்யமுடியும் என்று சொல்லும் போது அவர்களுக்கு இருக்கக்கூடிய அந்த ஒரு இயல்பான வாய்ப்பு, அதிகாரம் இங்கே நமக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. தாய்லாந்திலோ அல்லது போலந்திலோ இருக்கக்கூடிய ஒரு பச்சைக் குழந்தை இயல்பாக தான் என்ன மொழி பேசுகிறதோ அந்த மொழியிலே அனைத்தையும் கற்றுக்கொண்டு சிறப்பாக வளர்வதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கிறது.

senthilnathan6நாம், நமது குழந்தைகள் தெளிவாக நான்கு வார்த்தைகள் சொல்ல ஆரம்பிக்கிற வயதில் அவற்றின் வாய்களின் மீது குச்சியால் அடித்து நாம் கட்டாயமாக அக்குழந்தைகள் தமது மொழிகளைப் பேசுவதிலிருந்து தடுத்து நிறுத்தி, அந்த குழந்தைகளின் இயல்பூக்கத்தைக் கெடுத்து அவர்களின் மீது வேறு ஒரு மொழியை திணிக்கிறோம். இயல்பாக சிந்திக்கக்கூடிய அதாவது புத்தாக்க உணர்வோடு, கற்பித உணர்வோடு சிந்திக்கக்கூடிய குழந்தைகளை, எந்திரங்களாக மாற்றக்கூடிய மிக மோசமான சகித்துக்கொள்ளவே முடியாத வேலையை நாம் மனம் விரும்பி செய்துகொண்டிருக்கிறோம். கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாக, உளவியல் ரீதியாக நமது குழந்தைகள் மீது நாம் செலுத்துகிற இந்த வன்முறை இருக்கிறதே, இந்த வன்முறைக்குப் பின்னால் இருக்கக்கூடிய மொழிக்கொள்கை என்ன? இந்த மொழிக்கொள்கைதான் கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு, நியாயப்படுத்தப்பட்டது. நியாயப்படுத்தப்பட்டு அதுதான் சரி என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு எதிரான போராட்டத்தை நாம் தொடங்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காகத்தான் இந்த ஐம்பதாம் ஆண்டின் நினைவில் நாம் மீண்டும் ஒருமுறை மொழிப்போராட்டத்தை தொடங்கவேண்டிய கட்டாயத்திலே நாம் இருக்கிறோம்.

இது நிச்சயமாக எந்த மொழிக்கும் எதிரானது கிடையாது. இது எனது மொழிக்கு ஆதரவானது. தமிழுக்கு இது வேண்டும், தமிழ்நாட்டிற்கு இது வேண்டும் என்று சொல்வது என்பது வேறு ஒரு மொழியையோ, வேறு ஒரு கலாச்சாரத்தையோ, வேறு ஒரு நாட்டையோ எதிர்த்துப் போராடுகிற முழக்கம் கிடையாது. எனக்கு ஒன்று வேண்டும் என்பதற்கான போராட்டம் யாருக்கும் எதிரானது கிடையாது. ஆனால் எனக்கு அது வேண்டும் என்று நான் போராடும் பொழுது நீங்கள் குறுக்கே வந்து நின்றால், உங்களுக்கு எதிராகத்தான் நான் செயல்பட வேண்டியிருக்கும். தமிழ்நாட்டிலே அதைத்தான் நாம் பார்க்கிறோம். பேச்சிலே மூச்சிலே எல்லாவற்றிலும் தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டு தமிழுக்கு எதிராக நீண்டதூரம் நாம் பயணித்து இருக்கிறோம். இது வெறும் இரண்டு மூன்று அரசியல் கட்சிகளை குற்றம் சாட்டுகிற விடயம் இல்லை என்பதையும் நான் சொல்ல விரும்புகிறேன். வெறுமனே தி.மு.க தான் காரணம், அ.தி.மு.க. தான் காரணம் சொல்லிவிட்டு நீங்கள் தப்பித்துக்கொண்டு போய்விட முடியாது. நம் ஒட்டுமொத்த சமூகமே இந்தத் தவறை செய்திருக்கிறது. நமது படைப்பாளர்கள் இந்தத் தவறை செய்திருக்கிறார்கள், நமது கல்வியாளர்கள் இந்தத் தவறைச் செய்திருக்கிறார்கள், நமது எழுத்தாளர்கள், நமது ஊடகங்கள், நம் சமூகத் தலைவர்கள் எல்லோருமே இந்தத் தவறை செய்திருக்கிறார்கள். எல்லோரும் கூடிச்செய்த ஒரு மிகப்பெரிய பிழையை நாம் திருத்தக்கூடிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

நம்முடைய நிலைமை என்ன தெரியுமா? தமிழே படிக்கத் தெரியாத இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிலே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் நாம் பார்க்கிறோம். முதல் தலைமுறை அல்ல, இரண்டாம் தலைமுறை. அவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்துப்படிக்காமல், தமிழை எழுதப்படிக்கத் தெரியாமல் அரைகுறையாக தமிழைப் பேசுவார்கள். அதையே பெருமையாகவும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த இரண்டாம் தலைமுறை தமிழகத்தில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டாம் தலைமுறையை அப்படியே விட்டீர்கள் என்றால், அடுத்த தலைமுறையில் மெல்ல அல்ல, விரைவாக தமிழ் சாகும். இந்த நிலையிலும் நாம் தலையிடாமல் இருக்கவே முடியாது.

இதையெல்லாம் யோசித்துத்தான் எல்லா புலங்களிலும், எல்லா களங்களிலும், எல்லா தளங்களிலும் தமிழை நாம் ஆட்சி மொழியாகவும், பயன்பாட்டு மொழியாகவும் கொண்டு வருவதற்கு நாம் செய்யவேண்டிய மிகவும் பிரதானமான வேலை என்ன என்று யோசித்துப்பார்க்கிறோம். எல்லா மொழிச் செயல்பாடுகளும் அடிப்படையில் ஏதோ ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை மையப்படுத்தியிருக்கிறது. அது என்ன செயல்பாடு?

இந்தியாவின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை ஆக்கவேண்டும். அதுதான் முதலில். அதைப்போல பிற தேசிய இனங்களின் மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும் என்கிற புரிதலும் நமக்கு உண்டு. அரசியல் சாசன ரீதியான மாற்றம் இல்லாமல், தமிழ் அதிகாரம் பெற வாய்ப்பு இல்லை. அரசாங்கம் திட்டமிட்டு ஒரு சரியான மொழிக்கொள்கையையும், மொழி திட்டமிடுதலையும் வகுக்காமல் போனால் தனியார் துறைகளிலோ அல்லது மற்ற துறைகளிலோ மொழியை பயன்படுத்த வேண்டும் என்கிற தேவையோ கட்டாயமோ இருக்காது. நாம் தொடங்கவேண்டிய இடம் இந்தியாவின் அரசியல் சாசனத்தினுடைய பதினேழாவது பிரிவை தூக்கி எறிந்துவிட்டு முற்றிலும் ஒரு புதிய சனநாயகப் பூர்வமான மொழிக் கொள்கையை அதனிடத்தில் கொண்டுவருவதுதான். அதனுடைய அடிப்படையில்தான் நாம் சொல்லக்கூடிய ஆயிரெத்தட்டு மொழி செயல்பாடுகளையும் நாம் ஒருங்கிணைக்க முடியும்.

இந்த அடிப்படையைச் செய்யாமல் நாம் வேறு எதை செய்தாலும் பலனளிக்காது. வேறு எதுவுமே அந்தந்த ஆட்சியாளர்களுடைய அல்லது அந்தந்த நிறுவனங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த விடயமாக மாறுமே ஒழிய, அதற்கான உறுதிப்பாடு உருவாகாது. எனவேதான் தமிழ் மொழி உரிமை கூட்டியக்கத்தில் எங்களுடைய முதல் நோக்கமாக இருப்பது தமிழை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்குவது என்பது.

அதே சமயத்தில் தமிழுக்கு மட்டுமல்ல, நாம் மட்டும் போராடினால் போதாது, நமக்கு அவ்வளவு வலிமை இல்லை, இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மொழிகளைப் பேசக்கூடியவர்களிடத்திலும் இதைப்போன்ற கோரிக்கை இருக்கின்றன. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை இன்றுதான் கர்நாடகமும், மேற்குவங்காளமும், மகாராஷ்டிராவும், ஆந்திராவும், கேரளாவும், பஞ்சாப்பும் புரிந்து கொள்கின்றன என்பதுதான் உண்மை. நாம் இந்தி பேசாத மக்களையெல்லாம் இணைத்து இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியை எடுக்கவேண்டும். தமிழ்நாடு மட்டும் போராடினால் போதாது, நம்முடைய தோழமை தேசிய இனங்களையும் இணைத்துக்கொண்டு போராடவேண்டும். அதற்கான ஒரு ஏற்பாட்டையும் சேர்த்துத்தான் நாங்கள் தமிழ் உட்பட அனைத்து குறைந்தபட்சம் இந்தியாவின் அரசியல் சாசனத்தில் எட்டாம் பிரிவில் உள்ள பட்டியலில் உள்ள மொழிகளையாவது முதலாவது ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட துவங்கியிருக்கிறோம்.

தமிழ் மொழியுரிமை கூட்டியக்கத்தினுடைய நோக்கங்கள், செயல்பாடுகள் பலவாக இருந்தாலும் கூட அதனுடைய அடிப்படையான நோக்கம் என்பது அரசியல் சாசன ரீதியாக தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்குவதும் தமிழகத்திலுள்ள மத்திய, மாநில அரசுத்துறை, பொதுத்துறை, தனியார்துறை இந்த எல்லா இடங்களிலுமே அந்த மொழியை பயன்படுத்துவதற்கான சட்டரீதியான உத்திரவாதத்தைப் பெற்றுத் தருவதுதான். ஏட்டில் கொண்டுவருவது முதல் நடவடிக்கை. அதை நிறைவேற்றுவது என்பது இரண்டாவது நடவடிக்கை.

கேள்வி: தமிழ் வழிக்கல்வியின் எதிர்காலம் என்னென்ன?

tamilபதில்: குறிப்பாக தமிழ்வழிக் கல்வி என்று சொல்லும் பொழுது, நாம் இரண்டு விடயங்களை இங்கே பார்க்க வேண்டியிருக்கிறது. முதலாவதாக தமிழை ஒரு பாடமாகக்கூட படிக்கத் தேவையில்லை என்கின்ற ஒரு அவலமான சூழல் இருக்கக்கூடிய ஒரு நாட்டில் நாம் இருக்கிறோம். ஆக தமிழ் ஒரு பாடமாகக்கூட பயில்வது என்பதே கேள்விக்குறியாக இருக்கக்கூடிய நிலையில், தமிழ்வழிக் கல்வி அதாவது தமிழ் வழியிலேயே அனைத்தையும் கற்பதற்கான வாய்ப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்றால், இப்போதைய மொழிக்கொள்கையே தொடருமானால், பெரிய அளவிற்கு எதிர்காலம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேராமல் போவதற்குக் காரணம், அங்கே ஆங்கிலவழிக் கல்வி இல்லை என்று இந்த அரசாங்கம் நினைத்து, அரசுப் பள்ளிகளிலே ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவருவதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறது.

இருபத்தைந்து ஆண்டுகாலமாக தனியார் ஆங்கிலவழி கல்வி பள்ளிகளுக்கு எல்லா விதமான ஊக்கத்தைக் கொடுத்து, எல்லா விதமான வசதிகளையும் கொடுத்து நாடு முழுக்க கல்வி  வியாபாரிகள் பரவுவதற்கு தி.மு.க, அ.தி.மு.க அரசுகள் போட்டிபோட்டுக்கொண்டு வேலை செய்தன. காரணம் அந்தக் கல்வி வியாபாரிகள் இந்தக் கட்சிகளை சேர்ந்தவர்கள்தான் அல்லது இந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள்தான் அல்லது இந்தக் கட்சிகளுக்குத் தேவைப்படும் பொழுது பணம் கொடுக்கக்கூடிய நபர்கள்தான்.

ஆக தனியார் கல்வியை வளர்த்துவிட்டு, அதே சமயம் அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகளுடைய அனைத்து விதமான வசதிகளையும் முழுக்க முழுக்க சீரழித்தபிறகு உங்களால் என்ன செய்ய முடியும்?

vilayaadaadhe paappaa9ஆங்கில வழிக்கல்வி என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டு ஒரு தொழிலாக மாற்றப் பட்டு, அரசுத்துறை முழுக்க முழுக்க நசுங்கிப் போன நிலையில், இன்றைக்கு சாதாரண ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கீழ்மட்டத்தில் இருக்கக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை வரவேண்டும் என்று சொன்னால் ஒரு தனியார் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலவழிக் கல்வி படித்தால்தான் வரமுடியும் என்று இயல்பாக நம்பத் துவங்குகிறார்கள். ஏனென்றால் அவர்கள் கண் முன்பாக அதுபோன்ற சில உதாரணங்களை அவர்கள் பார்க்கிறார்கள். அதனால் மக்களை நாம் குறைகூற முடியாது. ஒரு சரியான கல்விக் கொள்கையையும், மொழிக்கொள்கையையும் இல்லாத இந்த அரசாங்கம்தான் குற்றவாளி.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழ்கல்விக்கும், தமிழ்மொழிக் கல்விக்குமான அடித்தளமே இங்கே அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. ஆக எந்த நம்பிக்கையில் தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி உயர்ந்து இருக்கும் என்று நாம் சொல்லமுடியும்? தமிழறிஞர்களும் மற்றவர்களும் தொடர்ந்து போராடியதால் சமீபகாலத்தில் தமிழை ஒரு பாடமாவது கட்டாயமாகப் படிக்கவேண்டும் என்கின்ற ஒரு கருத்து சிறிது பலப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். முன்பு மறுத்தவர்கள்கூட இன்று ஏற்றுக்கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள்.

இந்தியாவினுடைய அல்லது தமிழ்நாட்டினுடைய பொருளாதாரக்கொள்கை, கல்விக் கொள்கை இந்த இரண்டிலுமே நீங்கள் மாற்றங்களைச் செய்யாமல் அல்லது அந்த இரண்டில் எந்தவிதமான திசையில் நாம் போகிறோம் என்று முடிவெடுக்காமல் நீங்கள் பள்ளியில் மொழிக்கல்வியில் மட்டும் முடிவெடுக்கமுடியும் என்று நம்பினால், அதைவிட நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு செயல் வேறு எதுவும் கிடையாது. அதாவது இந்தியாவில் பொருளாதாரக்கொள்கை எந்த திசைவழியில் இருக்கிறதோ, அதனடிப்படையில்தான் இந்தியாவிலே அதனுடைய கல்விக்கொள்கை இருக்கும். இந்தியாவின் கல்விக்கொள்கை எந்த திசைவழியில் இருக்கிறதோ, அந்த அடிப்படையில்தான் மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி மொழிக் கொள்கை இருக்கும். அதற்கு உட்பட்டுத்தான் அந்தக் கல்வி எந்த மொழியிலே தரப்படுகிறது என்ற நிலைமை இருக்கும். ஆக இந்த பொருளாதாரம், கல்வி, மொழி என்ற மூன்றுமே கல்வித்துறையைப் பொறுத்தவரையில் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டது.

இதையெல்லாம் புரிந்தபிறகு மொழிப் போராட்டம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அதற்காக இது மிகப்பெரிய வேலை என்று நினைத்து அயர்ந்து அமர்ந்துவிடக்கூடாது.

போராட்டத்தை ஏதோ ஒரு முனையில் நாம் தொடங்கியாகவேண்டும். அதற்கு மொழிக்களம் நமக்கு முதன்மையாக இருக்கிறது.

அரசியல்சாசன திருத்தம் மேற்கொண்டுவிட்டால் எல்லாம் நாம்விரும்பியபடி நடந்துவிடும் என்ற பொய்யான வாக்குறுதியை நான் உங்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை என்பதையும் நான் இங்கே அழுத்தமாக குறிப்பிடவிரும்புகிறேன். ஆனால் அந்தத் திருத்தம் இல்லாமல் எதுவுமே சாத்தியம் இல்லை என்பதையும் தெளிவாக சொல்லிவிட விரும்புகிறேன்.

அரசியல் சாசன ரீதியான உத்திரவாதத்தை தமிழுக்குப் பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் நாம் நினைக்கிற பல்வேறு துறைசார்ந்த மொழிச் செயல்பாடுகள் அனைத்துமே, ஒன்று தோல்வியடையும் அல்லது மிகச்சிறிய அளவில் செயல்பட்டு ஏதோ வெற்றிபெற்றுவிட்டதுபோல ஒரு மாயையைத்தரும், உண்மையான வெற்றி ஒருபோதும் கிடைக்காது.

உரிமைகளை நாம் வென்றெடுக்காமல் ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்திவிட முடியும் என்று நாம் நினைத்தோம் என்றால் அது தோல்வியில்தான் முடியும். உரிமையை வென்றெடுக்காமல் ஒரு கொள்கையை மட்டும் நடைமுறைப்படுத்துவது என்பது  என்றைக்குமே சாத்தியம் கிடையாது. அந்த உரிமை என்பது நம்மைப் பொருத்தவரையில், சட்டம் இயற்றம் உரிமையோடு சம்பந்தப்பட்டது. ஒரு சனநாயக நாட்டில் உரிமை என்பது அரசியல் சாசனத்தோடு சம்பந்தப்பட்டது. அந்த அரசியல் சாசன உரிமையை வென்றெடுக்கும் வழிமுறையானது, பெரிய சனநாயக ரீதியான போராட்டமாக இருக்கலாம். ஆனால் அந்த உரிமையை நாம் வென்றெடுத்தால்தான் நாம் தமிழை உரிய இடத்தில் வைக்கமுடியும்.

தமிழாய்ந்த தமிழ்மகனே தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வந்தாலும்கூட, அரசியல் சாசன ரீதியில் நமக்கு உரிமை இல்லை என்றால் அவர் போடுகிற எல்லா சட்டங்களையும் அங்கே தில்லியில் உட்கார்ந்துகொண்டு, ஒரு நிமிடத்தில் இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று முடிவுகட்டிவிட புறந்தள்ளிவிடமுடியும். அதனால்தான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களில் தங்களுடைய மாநிலத்தின் மொழியை கல்வியிலே கட்டாயமாக ஆக்கவேண்டும் என்று மக்களோ அல்லது அந்த அரசாங்கங்களோ முயற்சி பண்ணும் பொழுதெல்லாம் யாரோ ஒருவர் நீதிமன்றத்திற்குச் சென்று அதற்குத் தடைவாங்க முடிகிறது.

mozhi2இன்று தெருப்பலகையில் தமிழ் கட்டாயமாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தாலும் கூட, யாரோ ஒரு வியாபாரி இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று சொல்லி அதற்குத் தடை வாங்க முடியும். தமிழை ஒரு பாடமாகவாவது கற்பியுங்களேன் என்றால், அந்த கல்வி வியாபாரி அதற்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்கிறார். கல்வி மாநிலப் பட்டியலில் இல்லை, பொதுப் பட்டியலில் இருக்கிறது. ஆக நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் கூட இந்த நாட்டினுடைய அரசியல் சாசனம் உங்களுக்கு எதிராக இருக்கிறது. இந்த நாட்டின் அரசியல் சாசனம் முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், மாநில அரசாங்கத்திற்கு எதிராகவும் இருக்கக்கூடிய தன்மை உடையதாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த அரசியல் சாசனத்தையே மறுவார்ப்பு செய்து ஒரு கூட்டாட்சியாக இந்தியாவை உருவாக்கவேண்டிய முயற்சியை நோக்கி நாம் செல்லவேண்டும் என்பதுதான் எனது பொதுவான அரசியல் நிலைப்பாடு. அல்லது நாம் ஒரு விடுதலையை நோக்கி நகரவேண்டும். ஆனால் அது ஒரு நீண்டகால நிலைப்பாடு என்பதால், ஒரு குறைந்தபட்சம் மொழிசார்ந்த விடயத்தில் அந்த மொழிக்கொள்கையைத் தீர்மானிக்கக்கூடிய அந்த பதினேழாவது பிரிவையாவது மாற்றவேண்டும் என்று நாம் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறோம். ஆக இந்த அடிப்படையைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவேன்.

mozhi4ஒரு அரசியல் போராட்டத்திற்கு சரியான இலக்கு இல்லாவிட்டால் வெறுமனே முழக்கங்களிலும் ஒரு விதமான சுய ஏமாற்றத்தோடும் முடிந்துபோய்விடும். இப்படித்தான் முப்பது நாற்பது ஆண்டுகாலமாக இந்த திராவிடக்கட்சிகள் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் அமைப்புகள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறார். ஏதோ அவர்கள் தான் தவறு செய்தார்கள் என்று சொல்லவில்லை, ஒருவர் ஏமாற்றுகிறார் இன்னொருவர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். எப்படிப்பார்த்தாலும் தமிழுக்குக் கேடுதான். அந்தக் கேடு வரக்கூடாது என்று சொன்னால் நம்முடைய போராட்டத்தின் இலக்குக்கு ஒரு தெளிவான ஒரு வழிமுறை இருக்கவேண்டும், அதற்குத் தெளிவான ஒரு இலக்கு இருக்கவேண்டும். அந்த இலக்கு என்பது இன்றைக்கு இதுதான்: மொழி அதிகாரம்.

கேள்வி: உங்கள் அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் பற்றிக் கூறுங்கள்?

பதில்: தமிழ் மொழி உரிமைக்கூட்டியக்கம் என்கிற இந்த அமைப்பு அரசுத்துறையிலும், தனியார் துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழி உரியவாறு பயன்படுத்தப்படுவதற்கான சட்டங்கள் இயற்றப்படுவதற்கும், திட்டங்கள் தீட்டப்படுவதற்கும், அதனுடைய நடைமுறைகள் நிறைவேற்றப்படுவதற்குமான ஒரு முன்முயற்சி எடுத்து செய்யக்கூடிய ஒரு அமைப்பாக, அதை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கக்கூடிய அமைப்பாக நாங்கள் இருக்க விரும்புகிறோம். அதுமட்டுமல்லாமல் எதிர்த்துப் போராட வேண்டிய நேரத்தில் எதிர்த்துப் போராடி, ஆக்கப்பூர்வமாக ஆலோசனை தரவேண்டிய நேரத்தில் ஆலோசனையும் தந்து செயல்படக்கூடிய ஒரு ஆக்கப்பூர்வமான அமைப்பாகத்தான் இருக்க விரும்புகிறோம். இது பல்வேறு தமிழ்தேசிய அமைப்புகள், பல்வேறு இடதுசாரி அமைப்புகள், தமிழின் மீது ஆர்வம் கொண்ட மற்ற அமைப்புகள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பு என்பது பல்வேறு அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்புதான். ஆனால் இதனுடைய நோக்கம் தமிழுக்கு சரியான அரசியல் ரீதியான தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்பது. இந்த நோக்கத்தை அடைவதற்கு நாங்கள் பல்வேறு விதமான வழிமுறைகளை யோசித்து வருகிறோம். எங்களுடைய பலத்தைப் பொறுத்து அவற்றை நாங்கள் ஒவ்வொன்றாக செய்வோம்.

 

senthilnathan5

எங்களது முதல் நடவடிக்கை என்பது, இந்த ஆண்டு சனவரி 25ம்-தேதி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினுடைய ஐம்பதாவது ஆண்டை நினைவு கூறும் விதமாக, சென்னை கடற்கரையிலே ஒரு பேரணி நடத்தினோம். அப்போது தமிழ்நாடு முழுக்க நாங்கள் எடுத்த முன்முயற்சியின் பலனாக, பல இடங்களிலே நினைவேந்தல் நிகழ்ச்சி என்பது நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் 1938-ல் முதன்முதலாக மொழிக்காக உயிரிழந்த தியாகியான நடராசனுடைய நினைவஞ்சலியை, இங்கே முதன்முறையாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெரிய அளவிற்கு நடத்தினோம். அதனுடைய முக்கியமான ஒரு செயல்பாடு என்னவென்று சொன்னால், 1938லிருந்து இன்றுவரையிலும் நடக்கக்கூடிய இந்தி எதிர்ப்புக்காகப் போராடி, இழந்த அத்தனை நபர்களின் நினைவைப் போற்றக்கூடிய ஒரு கலாச்சாரமாக இப்பொழுது மாறிக்கொண்டிருக்கிறது. இது எங்களுடைய முதல் செயல்பாடு.

அடுத்தாக இந்த ஆண்டு செப்டம்பர் 19,20-ல் சென்னையில் மொழிஉரிமை மாநாடு என்று ஒன்றைக் கூட்டப்போகிறோம். இந்த மாநாட்டின் அடிப்படை என்னவென்றால், “தமிழை ஆட்சிமொழியாக்குதல் அல்லது தமிழ் உள்பட இந்திய அரசியல் சாசனத்தில் எட்டாம் பிரிவில் உள்ள மொழிகளை ஆட்சி மொழியாக்குவது” என்கிற அடிப்படையில், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள அந்தந்த மொழிக்காகப் போராடுபவர்களும் கூட கலந்து கொள்ளக்கூடிய ஒரு மாநாடு. இதில் தமிழறிஞர்கள், தமிழ் மொழிக்கான செயல்பாட்டாளர்கள், மற்ற மாநிலங்களில் உள்ள மொழிஉரிமைப் போராளிகள், பிற சனநாயக சக்திகள் எல்லோரும் இணைந்து, இந்த மாநாட்டில் உரிய தீர்மானங்களை நிறைவேற்றி, அந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் நாங்கள் செயல்படுவது என்று திட்டமிட்டிருக்கிறோம். அதில் மையமாக வைத்திருப்பது என்னவென்றால், தமிழ் ஏன் ஆட்சிமொழியாக, அரசியல் சாசன ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்? என்பதற்கான காரணங்களை, துறை வாரியாக தொகுத்துக் கொடுப்பது என்பது என்னுடைய கடமைகளில் ஒன்று அதாவது building our case என்று சொல்லுவோம்.

tamilநாம் ஏன் ஆட்சிமொழி அங்கீகாரம் கேட்கிறோம் என்றால், வெறுமனே ஒரு ஆசை சம்பந்தப்பட்ட விடயமாக யாரும் நினைத்துவிடக்கூடாது. இந்த காரணங்களால் நாம் கேட்கிறோம் என நிரூபிக்க வேண்டும். அந்த நிரூபணம் இருந்தால் மட்டும்தான் நாம் சட்டரீதியான அங்கீகாரத்திற்கான போராட்டம் வலுவாகும். அந்த நிரூபணத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியும் அந்த மாநாட்டிலே செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு துறையிலும் அரசு மட்டுமல்லாமல் சமூகம் என்ன செய்யவேண்டும், ஊடகம் என்ன செய்யவேண்டும், தமிழறிஞர்கள் என்னசெய்யவேண்டும், அரசியல் கட்சிகள் என்ன செய்யவேண்டும், மாணவர் அமைப்புகள் என்ன செய்யவேண்டும், வழக்கறிஞர்கள் என்ன செய்யவேண்டும், மத்திய அரசு ஊழியர்கள் என்ன செய்யவேண்டும், மாநில அரசு ஊழியர்கள் என்ன செய்யவேண்டும், ஆசிரியர்கள் என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொருவரும் செய்யவேண்டிய பணிகளை ஒரு வாரம் பட்டியல் எடுத்து அவர்கள் மத்தியிலே அதைக்கொண்டுபோய், இதை நீங்கள் செய்யுங்கள், நீங்கள் பள்ளி ஆசிரியராக இருந்தால் நம்முடைய மாணவர்களுக்கு, நவீனமான முறையில் அவர்களுக்கு பிடித்த முறையிலே பாடங்களை நீங்கள் கற்றுக்கொடுங்கள். அப்போதுதான் எதிர்காலத்தில் தமிழ்மீது ஆர்வத்தோடு இருப்பார்கள் என்று அவங்களிடம் பேசவேண்டியிருக்கிறது.

உதாரணமாக எங்களுடைய செயல்பாடு ஓரளவிற்கு வந்த சமயத்தில் இங்கே இருக்கக்கூடிய சில மத்திய அரசாங்க ஊழியர்களும் கூட அவர்களது துறையிலே நடக்கக்கூடிய இந்தித் திணிப்பிற்கு எதிராக செயல்படக்கூடிய போக்கை அதிகரித்திருக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் L.I.C ஊழியர்கள் தங்களுடைய போராட்டத்திற்கு, தங்களுடைய அலுவலகங்களில் இந்தி திணிக்கப்படுவதால் தங்களுக்கு என்ன பிரச்சனை வருகிறது என்பதையெல்லாம் முன்வைத்து, சமீபத்தில் ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தினார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி நாள் என்று கடைபிடிக்கப்படும். இந்த முறை அந்த நாளுக்கு எதிராக மத்திய அரசு அலுவலகங்களிலேயே முயற்சிகளை மேற்கொள்வதற்காக நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு ஊழியர்களின் ஆதரவோடு.

இப்படி சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருமே செயல்பட்டால் மட்டும்தான், ஈடுபட்டால் மட்டும்தான், தலையிட்டால் மட்டும்தான் இது சாத்தியமாகும். மொழிப்பிரச்சனை என்பதை தமிழறிஞர்களின் இயக்கமாக மட்டுமே இல்லாமல், ஏதோ சில மொழி ஆர்வலர்களுடைய முழக்கமாக மட்டுமல்லாமல், மக்களுடைய வாழ்வாதாரம் சார்ந்த முழக்கமாக நாங்கள் எடுக்கிறோம். மக்கள் மத்தியில் இதைத்தான் சொல்கிறோம்.

இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய சிறு நகரங்களில் உள்ள ஒரு ரயில்வே நிலையத்திலும் அல்லது வங்கிகளிலும் பார்த்தீர்கள் என்றால், வட இந்தியாவிலிருந்து நேரடியாக நியமிக்கிறார்கள். கீழ்மட்ட பணிகளை நான் சொல்லவில்லை, மேல்மட்ட பணிகள் அல்லது இடைநிலையில் இருக்கக்கூடிய பணிகளில் தமிழும் தெரியாத, ஆங்கிலமும் சரியாகத் தெரியாத, இந்தி மட்டுமே தெரிந்தவர்களை இங்கே நியமிக்கிறார்கள். சென்னையில் பல இடங்களில் நான் பார்த்திருக்கிறேன். இந்தப் போக்கு அதிகரிக்குமானால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மத்திய அரசு நிறுவனங்களில் இடைநிலை, மேல்நிலை பணிகளுக்கு வடக்கிலிருந்து ஆட்கள் நியமிப்பது நீடிக்குமானால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்காது. இதை எப்படி நீங்கள் தடுக்க முடியும், சட்ட ரீதியாக தடுக்கமுடியாது. சட்டரீதியாக இந்தியாவில் ஒருவர் எங்கிருந்தாலும் இன்னொரு இடத்தில் வேலை செய்யமுடியும். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் வேலை செய்யவில்லையா?. இதை சட்டரீதியாக தடைசெய்யக்கூடிய விடயம் கிடையாது. அதேபோல மக்கள் புலம்பெயர்ந்து வேலைசெய்வதும் தவறானது கிடையாது. ஆனால் இந்தியாவின் மொழிக்கொள்கைக் காரணமாக இந்தி மட்டும் தெரிந்தால் போதும், L.I.C.-லேயோ அல்லது ரயில்வே நிலையத்திலோ அல்லது ஒரு வங்கியிலோ வேலை செய்யலாம், எங்கிருந்தாலும் வேலை செய்யலாம். ஆனால் அந்தந்த மாநிலங்களில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுமானால் அது பெரிய அநீதி.

senthil nathan 2தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு, ரயில்வே நிலையங்களிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் வெவ்வேறு நிறுவனங்களிலோ வேலை வேண்டும் என்று சொன்னால், தமிழ் நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்களிலே தமிழ் பயன்படுத்தப்பட்டால் மட்டும்தான் அது பாதுகாப்பு அரணாக இருக்கும், அதை புரிந்துகொள்ளவேண்டும். மொழிக்கொள்கை என்பது வெறும் அடையாளக் கொள்கையாகவும் ஒரு கலாச்சார விடயமாகவும் நாம் திருப்பித்திருப்பிப் பேசுவதில் பலன் இல்லை என்றால் மொழிக்கொள்கைக்கும் பொருளாதாரத்திற்கும், மொழிக்கொள்கைக்கும் வாழ்வியலுக்கும் உள்ள தொடர்பை நாம் துண்டித்து விடுவோம். யாருமே இதைப் பேசவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு தனியார் நிறுவனம் கட்டாயமாக தமிழை பயன்படுத்தவேண்டும். எங்கே பயன்படுத்தவேண்டும் என்றால், அவர்களது அலுவலகங்களின் உள்செயல்பாட்டுக்கு பயன்படுத்தவேண்டும் என்று சொல்லவில்லை, மக்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான தொடர்பு இருக்கிறது இல்லையா, அந்த இடத்தில் தமிழை பயன்படுத்தவேண்டும் என்று ஒரு சட்டம் இல்லை என்றால், அவன் தமிழில் Callcenter வைக்கமாட்டானே. நீங்கள் உள்ளுரில் ஒரு பிரச்சனைக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால் இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலேயோதான் பதில் சொல்லுவார்கள்.

நம்முடைய வரிப்பணத்தை வாங்கக்கூடிய மத்திய அரசாங்கமாக இருக்கட்டும், நம்முடைய பணத்திலே தங்களது பொருளையோ அல்லது சேவையையோ விற்கக்கூடிய தனியார் நிறுவனமாகட்டும், நாம் கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல முடியாமல் போவான். அதுமட்டுமல்லாமல் அந்த பதில் சொல்லக்கூடிய இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லாமல் போய்விடும். ஆனால் சட்டம் வலியுறுத்தினால், சட்டப்படி நீ தமிழ்நாட்டில் தொழில் துவங்கினால் Callcenter வைக்கவேண்டும் என்றால், அந்த கால்சென்டரில் தமிழில்தான் பதில் சொல்லவேண்டும் என்ற நிலைமை இருந்தால்தான், அங்கு இருக்கிற வேலை தமிழனுக்குக் கிடைக்கும். அதாவது மத்திய அரசாங்கம் தன்னுடைய செயல்பாடுகளை தமிழ்நாட்டில் தமிழில்தான் செய்யவேண்டும் என்றிருந்தால்தான், அந்த வேலையில் தமிழ்நாட்டினருக்கு இடம் கிடைக்கும். ஒரு தனியார் நிறுவனம் தன்னுடைய மக்களுக்கும் தங்களுக்கும் இடையிலான பணிகளை தமிழ்நாட்டில் தமிழில் செய்யவேண்டும் என்று சொன்னால்தான், அங்கு Callcenter பணியாளராக தமிழர் செல்ல முடியும். அப்படி இல்லாத பட்சத்தில் இந்தியாவில் இருக்கிற எல்லா மாநிலங்களையும் சேர்த்து டெல்லியில் இந்தி பேசுகிற சிறிது நபர்களை வைத்து Callcenter நடத்தினால் அங்கே போக முடியும். ஆக மொழிக்கும் வேலைவாய்ப்புக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா, மொழிக்கும் தொழிலுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா.

mozhi2தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு, ரயில்வே நிலையங்களிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் வெவ்வேறு நிறுவனங்களிலோ வேலை வேண்டும் என்று சொன்னால், தமிழ் நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்களிலே தமிழ் பயன்படுத்தப்பட்டால் மட்டும்தான் அது பாதுகாப்பு அரணாக இருக்கும், அதை புரிந்துகொள்ளவேண்டும். மொழிக்கொள்கை என்பது வெறும் அடையாளக் கொள்கையாகவும் ஒரு கலாச்சார விடயமாகவும் நாம் திருப்பித்திருப்பிப் பேசுவதில் பலன் இல்லை என்றால் மொழிக்கொள்கைக்கும் பொருளாதாரத்திற்கும், மொழிக்கொள்கைக்கும் வாழ்வியலுக்கும் உள்ள தொடர்பை நாம் துண்டித்து விடுவோம். யாருமே இதைப் பேசவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு தனியார் நிறுவனம் கட்டாயமாக தமிழைப் பயன்படுத்தவேண்டும். எங்கே பயன்படுத்தவேண்டும் என்றால், அவர்களது அலுவலகங்களின் உள்செயல்பாட்டுக்கு பயன்படுத்தவேண்டும் என்று சொல்லவில்லை, மக்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான தொடர்பு இருக்கிறது இல்லையா, அந்த இடத்தில் தமிழை பயன்படுத்தவேண்டும் என்று ஒரு சட்டம் இல்லை என்றால், அவன் தமிழில் வாடிக்கையாளர் சேவை மையம் வைக்கமாட்டானே. நீங்கள் உள்ளுரில் ஒரு பிரச்சனைக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால் இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலேயோதான் பதில் சொல்லுவார்கள்.

நம்முடைய வரிப்பணத்தை வாங்கக்கூடிய மத்திய அரசாங்கமாக இருக்கட்டும், நம்முடைய பணத்திலே தங்களது பொருளையோ அல்லது சேவையையோ விற்கக்கூடிய தனியார் நிறுவனமாகட்டும், நாம் கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல முடியாமல் போவான். அதுமட்டுமல்லாமல் அந்த பதில் சொல்லக்கூடிய இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லாமல் போய்விடும். ஆனால் சட்டம் வலியுறுத்தினால், சட்டப்படி நீ தமிழ்நாட்டில் தொழில் துவங்கினால் வாடிக்கையாளர் சேவை மையம் வைக்கவேண்டும் என்றால், அந்த வாடிக்கையாளர் சேவை மையத்தில் தமிழில்தான் பதில் சொல்லவேண்டும் என்ற நிலைமை இருந்தால்தான், அங்கு இருக்கிற வேலை தமிழனுக்குக் கிடைக்கும். அதாவது மத்திய அரசாங்கம் தன்னுடைய செயல்பாடுகளை தமிழ்நாட்டில் தமிழில்தான் செய்யவேண்டும் என்றிருந்தால்தான், அந்த வேலையில் தமிழ்நாட்டினருக்கு இடம் கிடைக்கும். ஒரு தனியார் நிறுவனம் தன்னுடைய மக்களுக்கும் தங்களுக்கும் இடையிலான பணிகளை தமிழ்நாட்டில் தமிழில் செய்யவேண்டும் என்று சொன்னால்தான், அங்கு வாடிக்கையாளர் சேவை மையப் பணியாளராக தமிழர் செல்ல முடியும். அப்படி இல்லாத பட்சத்தில் இந்தியாவில் இருக்கிற எல்லா மாநிலங்களையும் சேர்த்து டெல்லியில் இந்தி பேசுகிற சிறிது நபர்களை வைத்து வாடிக்கையாளர் சேவை மையம் நடத்தினால் அங்கே போக முடியும். ஆக மொழிக்கும் வேலைவாய்ப்புக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா, மொழிக்கும் தொழிலுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா.

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கிறது என்று சொன்னால், வரக்கூடிய டெலிகாம் நிறுவனம் தங்களுடைய விளம்பரங்களை தமிழில் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் வரும். தங்களுடைய விளம்பரங்களை தமிழில் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் வரும் பொழுது, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கோ, தமிழ்நாட்டின் செய்தித்தாளுக்கோ, தமிழ்நாட்டில் வரக்கூடிய பத்திரிகைக்கோ விளம்பரம் கிடைக்கும். அல்லது அவர்களது அனைத்து விளம்பரங்களிலும் தமிழ் இருக்கவேண்டும் என்று கட்டாயம் இருந்தால், இங்கே இருக்கக்கூடிய அச்சகர், இங்கே இருக்கக்கூடிய D.T.P வடிவமைப்பாளர் வேலை கிடைக்கும். ஆக மொழி என்பது ஆதாரபூர்வமாக சட்டப்பூர்வமாக வலியுறுத்தப்படாவிட்டால் இது எதுவுமே நடக்காது. தமிழ்நாட்டில் ஊடகம் வளரவேண்டும், ஊடகம் வளரவேண்டும் என்று சொன்னால், சட்டம் நமக்கு எதிராக இருக்கிறதே.

ஒரு மத்திய அரசாங்கம் தன்னுடைய விளம்பரத்தை ஆங்கிலத்திலேயே தமிழ் பத்திரிகையில் கொடுக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. இல்லையென்றால் தமிழ் பத்திரிகையில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா முழுக்க நான்கைந்து ஆங்கிலப் பத்திரிகையில் கொடுத்தால் போதும், இந்தி பத்திரிகையில் கொடுத்தால் போதும். அப்படி இருக்கும் பொழுது மாநில மொழியில் வரக்கூடிய செய்தித்தாள்களுக்கு யார் விளம்பரம் கொடுப்பார்கள். நீங்கள் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் இந்த மொழிப்பிரச்சனை என்பது சாதாரண பிரச்சனை இல்லை. இந்த மொழியின் மூலமாகத்தான் நம்முடைய அதிகாரத்தை நாம் உருவாக்கிக் கொள்கிறோம். இந்த மொழியின் மூலமாகத்தான் நமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறோம். மொழி என்பது ஒரு சமூகத்தினுடைய சாராம்சமான ஒரு விடயம். அதாவது தகவல் தொடர்பு என்பதுதான் வணிகம். தகவல் தொடர்பு என்பதுதான் அரசு, தகவல் தொடர்பு என்பதுதான் நிர்வாகம், தகவல் தொடர்பு என்பதுதான் கலாச்சாரம், தகவல் தொடர்பு என்பதுதான் சினிமா, தகவல் தொடர்பு என்பதுதான் ஊடகம், அந்த தகவல் தொடர்பு என்று வரும்பொழுது எந்த மொழியிலும் சேர்ந்துதான் வரும், தகவல் தொடர்பு என்பது தனியாக நிற்பது கிடையாது. ஒரு காட்சி கூட கலாச்சாரம் சார்ந்ததுதான்.

விளம்பரத்தில் ஒரு பெண்ணின் முகத்தை போடுகிறீர்கள் என்றாலும் கூட ஒரு பன்னாட்டு நிறுவனம் இந்தியாவிற்கு வரும்பொழுது ஐரோப்பிய முகத்தைப் போடாது, இந்திய முகத்தைத்தான் போடும். ஆக பேச்சே இல்லாத ஒரு பிம்பத்திற்குக் கூட கலாச்சாரம் தொடர்புடையதாக இருக்கிறது. நாம் ஒரு சீன முகத்தைப்போட்டு இங்கு ஒரு செல்போன் நிறுவனத்தை விளம்பரம் பண்ணினோமா?, அல்லது ஒரு அமெரிக்கன் முகத்தைப் போட்டு விளம்பரம் பண்ணினோமா? உள்ளுர் முகத்தைத்தானே போடவேண்டும். அப்படித்தான் தகவல் தொடர்புதான் இன்று அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும், பொருளாதாரத்திற்கும், அரசியலுக்கும், பண்பாட்டுக்கும் ஆதாரம் என்று சொல்லும் போது அந்தத் தகவல் தொடர்பு எந்த மொழியில் இருக்கிறது என்பதை பொறுத்துதான் உங்களது அதிகாரம் இருக்கும்.

senthil nathan 1பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழிகள் தினம். இந்த சர்வதேச தாய்மொழிகள் தினத்தின் அடிப்படையே தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதுதான். ஆனால் அந்த நாளில் இந்தியாவினுடைய மத்திய அரசாங்கம் சர்வதேச தாய்மொழிகள் நாள் வாழ்த்தைத் தெரிவிக்கிறது, விளம்பரம் தருகிறது. எப்படி தெரியுமா? அந்த விளம்பரத்தை இந்தியில் மட்டும் தருகிறது. அதுமட்டுமல்ல அந்த இந்தி விளம்பரத்தை தினத்தந்தியிலும் வெளியிடுகிறது. அதாவது வேறு ஒரு நாளில் வேறு ஒரு விடயத்திற்கு இந்தியில் நீங்கள் விளம்பரம் கொடுப்பது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது, அதே சமயத்தில் நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரு விடயம். தாய்மொழிநாள் அன்றைக்குக் கூட தாய்மொழியில் விளம்பரம் தரமாட்டேன், தாய்மொழியில் உன்னை வாழ்த்தமாட்டேன், என் தாய்மொழியில்தான் வாழ்த்துவேன் என்று இந்த அரசாங்கம் சொல்லுமானால் இதை விட மிக மோசமான மிக சனநாயக விரோதமான ஒரு போக்கு இருக்க முடியுமா? இந்த உலகத்தில். உலகத்தில் எந்த நாடாவது அதாவது உங்களுடைய பிறந்த நாளுக்கு என்னை வாழ்த்துங்கள் என்று சொல்வது எப்படி இருக்கும்?. உங்களுக்கு பிறந்த நாள் உங்களை வாழ்த்ததான் நான் வருகிறேன், ஆனால் என்னிடம்தான் அதிகாரம் இருக்கிறது? உனக்குதான் பிறந்தநாள் ஆனால் நீதான் என்னை வாழ்த்தவேண்டும் என்று சொன்னால் அது எவ்வளவு அயோக்கியத்தனமானது.

சர்வதேச தாய்மொழிகள் நாள் என்பது வங்கதேசத்தில் அவர்கள் மீது உருது மொழி திணிக்கப்பட்ட போது, வங்கதேச மக்கள் எதிர்த்துப் போராடி இறந்து போனார்கள். அந்த இறந்துபோன நாளைத்தான் சர்வதேச தாய்மொழிகள் நாள் என்று கொண்டாடுகிறார்கள். மொழி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய நாள்தான் அது. அந்த நாளில் இந்தி பத்திரிகை என்றால் அதோடு போய்விடும், ஆனால் தமிழ் பத்திரிகையான தினத்தந்தியில் வாழ்த்து தெரிவிக்கிற வகையில் இந்தியில் இருக்கிறது. மற்ற மொழிகளை சிறிது சிறிதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அந்த விளம்பரத்தின் அடிப்படை இந்தி விளம்பரம். இப்படிப்பட்ட மோசமான மொழிசார்ந்த அடக்கு முறையும், மொழி சார்ந்த ஒடுக்கு முறையும், மொழி சார்ந்த ஆதிக்கமும் இருக்கக்கூடிய நாடு இந்தியா அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த நாட்டில் தமிழின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள், தமிழ்நாட்டில் இருக்கிற தனிமனிதனாக உங்களுடைய சுயநலமாக நீங்கள் சிந்தித்தாலும் கூட, தமிழுக்கு உரிமை வராமல் தமிழனுக்கு உரிமை வராது. நீங்கள் பொது நலமாக யோசிக்க வேண்டாம், சுயநலமாக யோசித்தாலும் கூட உங்களுடைய எதிர்காலத்திற்கு, உங்களுடைய தொழில் எதிர்காலத்திற்கு, உங்களுடைய வேலைவாய்ப்புக்கு, உங்களுடைய இடத்திற்கு அதாவது இந்த நாட்டில் உங்களுக்கு இடம் வேண்டும் இல்லையா, அந்த இடத்திற்காக உத்திரவாதம் வேண்டும் என்று சொன்னால் நீங்கள் செய்யவேண்டிய வேலைகள் பல இருக்கிறது. அதில் முக்கியமான வேலை நமது மொழி ஆட்சிமொழியாக ஆக வேண்டும். ஆக தமிழ் ஆட்சிமொழியாகாமல் தமிழ்நாட்டின் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் நமக்கு எந்த எதிர்காலமும் கிடையாது. தமிழ் ஆட்சி மொழி ஆகாமல் தமிழ்நாட்டில் தனியார் துறைகளிலோ மற்ற துறைகளிலோ நமக்கு வேலைவாய்ப்பும் தொழில்வாய்ப்பும் கிடையாது.

senthil nathan 3தமிழ் ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டால் அதனுடைய பலன் ஆயிரம். அதை ஆட்சி மொழியாக்கப்படாத நிலையில் நாம் இழந்திருப்பது பல்லாயிரம். இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் மீண்டும் மீண்டும் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் இவை வெறும் உணர்ச்சிகரமான விடயமாக, அடையாளமான விடயமாக இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பான மொழி, ஐந்தாயிரம் வருடத்திற்கு முன்பான மொழி, என் மொழிக்கு உரிமை இல்லை என்று சொன்னால் மட்டும் போதாது. இந்த மொழிக்கு எந்த வயது என்பதைப் பற்றி கவலையே கிடையாது. அது பழைய மொழியோ, புதிய மொழியோ அதெல்லாம் பிரச்சனை இல்லை, அது என் மொழி, என்னுடைய மொழிக்கு தேவையான உரிமை இருக்கவேண்டும். இந்தப் போராட்டம் என்பது ஒரு வாழ்வாதாரத்திற்கான போராட்டம், இந்தியாவிலே மற்ற எந்த மாநிலத்திற்காரர்களும் யாரைவிடவும் நாம் குறைந்து போய்விடவில்லை, நாம் சரியாக இருக்கிறோமா இல்லையா என்பதை பரிசோதிப்பதற்கான போராட்டம். இந்தியா என்கிற நாடு என் நாடுதானா இல்லயா என்பதை பரிசோதிப்பதற்கான போராட்டம். இதில் தோல்வியடைந்தால் அந்தத் தோல்வி இந்தியாவிற்குத்தான் தமிழ்நாட்டிற்கு அல்ல. இந்தக் கருத்தை நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய மொழிக்கு உரிமைவேண்டும் என்று நடத்துகிற போராட்டத்தை இந்திய அரசாங்கம் மறுக்குமானால் அது இந்தியாவிற்கான தோல்வியாக மாறுமே ஒழிய, தமிழ்நாட்டிற்கான தோல்வியாக ஒருபோதும் மாறாது. நாங்கள் அடுத்தகட்டத்தை நோக்கி நிச்சயமாக நகருவோம்.

கேள்வி: தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

senthilnaathan1பதில்: தமிழ்நாட்டில் இப்போது நடைமுறையில் இருப்பது ஒரு விதத்தில் தி.மு.க, அ.தி.மு.க. கூட்டாட்சிதான் அதாவது ஏகபோகத்திற்குப் (monopoly) பதிலாக இரட்டை ஏகபோகம் (duopoly). தி.மு.க. இல்லையென்றால் அ.தி.மு.க, அ.தி.மு.க. இல்லையென்றால் தி.மு.க என்கிற நிலை. வேறு எந்த மாற்றும் இல்லாத சூழலில்தான் ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் என்று மாற்றி மாற்றிக் இவர்களையேத் தேர்ந்தெடுக்கக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள். இது ஒரு அவலமான சூழல். இவர்களுக்கு மாற்றாக வரக்கூடியவர்கள் சில சமயங்களில் இவர்களை விட மோசமானவர்களாக இருப்பார்களோ என்கிற அச்சம் இருக்கிறது. இன்னொரு பக்கம் பார்க்கும் பொழுது சிறந்த மாற்றுக் கருத்துக்களை வைத்திருப் பவர்கள், வெறும் லட்சியவாதிகளாக இருக்கிறார்களே ஒழிய நடைமுறைவாதிகளாக இல்லை.  விஜயகாந்தை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் தி.மு.க, அ.தி.மு.க.வை விட மிக மோசமான அரசியல் கலாச்சாரத்தை உடையவர். இவர்களுக்கு மாற்றாக  காங்கிரசையோ, பா.ஜ.க-வையோ முன்வைக்க முடியாது.

மாற்று என்று சொல்லக்கூடிய பல அமைப்புகள் சாதி அமைப்புகளாக இருக்கின்றன. பல அமைப்புகள் லட்சியவாத அமைப்புகளாக இருந்து, நாடாளுமன்ற அரசியல் என்ற ஒரு விடயத்தை சரியாக புரிந்துகொள்ளாத தன்மை உடையதாக இருக்கின்றன. புதிதாக வந்திருக்கக்கூடிய தமிழ்தேசிய அமைப்புகள்கூட இந்த வகைகளில் அடங்குபவைதான்.

நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் ஒரு எல்லைக்குட்பட்டதுதான். ஆனால் அந்த எல்லைக்குட்பட்ட பெரும்பரப்பில் ஒரு சிறு காணியளவைக்கூட நாம் ஆக்கிரமிக்கவில்லை. நம்முடைய இலக்கு என்பது இந்தியாவினுடைய மத்திய அரசாங்கத்திடம் போராடி தமிழ்நாட்டிற்கு உரிமை பெறுவதுதான் என்பதை புரிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு இடையிலான வித்தியாசத்தை பெரிதுபடுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் ஒரு விதமான விதிவிலக்குவாதம் exceptionalism நம்மை சீரழிக்கிறது, தமிழன் என்று சொன்னால் எனக்கு சில குணாதிசயம் இருக்கிறது, அதற்கு ஏற்றவாறுதான் நடந்துகொள்வேன் என்று சொல்கிறார்கள். உலகத்தையும் உலகத்தின் போக்குகளையும் புரிந்துகொள்ளாத, தமிழர்களுக்கு நண்பர்களை உருவாக்குவதை விட எதிரிகளை உருவாக்கக்கூடிய மனநிலையோடு செயல்படக்கூடிய அமைப்புகளாக, பல தமிழ்த் தேசிய அமைப்புகள் இருக்கிறார்கள். இவர்களாலும் பெரிய மாற்று கொடுக்க முடியாது. ஆனால் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியத்தை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டின் உரிமைகளுக்கான அரசியல் வேண்டும் என்பதிலே மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் தமிழ் அமைப்புகள் ஒட்டுமொத்தமான இன்றைய இந்திய சூழலில், இன்றைய உலகமயமாக்கல் சூழலில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி ஒரு தெளிவான பார்வை உடையவர்களாக இல்லை. அதனால் மக்கள் மத்தியில் நாம் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

இன்னொரு விபத்தும் என்ன நடக்கிறது. நாம் ஈழ ஆதரவிற்கான செயல்பாட்டில் இருக்கிறோம் என்றாலும் கூட ஈழத்து அரசியலே, தமிழ்நாட்டு அரசியல் அல்ல. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது இங்கே இருக்கக்கூடிய தமிழ்தேசிய அமைப்புகளும் சரி, ம.தி.மு.க. போன்ற அமைப்புகளும் சரி அவர்களுடைய பிரதான விடயமாக ஈழ அரசியல் மட்டுமே இருக்கிறது. நாம் எவ்வளவுதான் ஈழத்திற்கு ஆதரவாளர்களாக இருந்தாலும்கூட நம்முடைய உள்ளுர் அரசியல்தான் நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அதற்காகத்தான் நாம் அதிக நேரத்தை செலவிடவேண்டியிருக்கிறது. அந்த அடிப்படையில் இல்லாமல், ஈழத்தை தமிழ்நாட்டின் மீது ஒரு நிழல் போல பதியவைத்து நாம் அரசியல் செய்துகொண்டிருந்தோம் என்றால் மக்கள் தி.மு.க, அ.தி.மு.க-விற்கு மாற்றாக நம்மை நினைக்க மாட்டார்கள். ஈழ ஆதரவு செயல்பாடு வரும்பொழுது உங்களோடு மக்கள் இணைந்துகொள்வார்கள். ஆனால் மற்ற அரசியல் ரீதியான செயல்பாடுகள் என்று வரும்பொழுது அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

senthilnaathan3ஆனால் இவற்றின் அடிப்படையில் அவநம்பிக்கை கொள்ள அவசியமில்லை. எல்லா அமைப்புகளுமே மாற்றங்களுக்கு உட்பட்டுதான் இருக்கின்றன. நீண்ட காலத்திற்குப் பிறகு நாங்கள் அரசியல் அமைப்பாக செயல்படுவது கூட எங்களுக்கு அந்த நம்பிக்கை மீண்டுவந்ததுதான் காரணம். தமிழ்நாட்டில் பல அமைப்புகள் அதாவது, நான் மக்கள் இணையம் என்ற அமைப்பில் இருக்கிறேன், இதைப்போல பல அமைப்புகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நெருங்கி வரக்கூடிய சூழலில்தான் நாம் இருக்கிறோம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, அனைத்திந்திய கட்சிகளுடைய தமிழ்நாட்டு துரோகத்திற்கு எதிராக ஒரு உண்மையான சரியான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்து செல்வதே பிரதான கடமையாக இருக்கிறது. அது இனவாதமாகவும் இல்லாமல், இன்னொரு பக்கம் மத்திய அரசாங்கத்தோடு சரணாகதி அடையக்கூடிய பாதையாகவும் இல்லாமல் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்கான போராட்டமாக நிற்கக்கூடிய பல புதிய அமைப்புகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. இப்போது அந்த அமைப்புகள் துண்டு துண்டாக இருந்தாலும் கூட வெகுவிரைவில் இவர்களில் பலர் இணைந்து ஒரு ஒற்றை அமைப்பாக நிற்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டினுடைய அரசியலை நம் தமிழ் தேசிய அரசியலாக, முற்போக்கான தமிழ்தேசிய அரசியலாக, பரந்துபட்ட மனப்பான்மையுடைய தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்குமான தமிழ் தேசிய அரசியலாக மாற்றவேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அந்த மாற்றம் வரும் என்று உறுதியாக நாங்கள் நம்புகிறோம். அது உடனடியாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இப்போது இருக்கிற தி.மு.க, அ.தி.மு.க.வினுடைய அரசியல் காலாவதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் திராவிட யுகம் முடிந்துவிட்டது. நாம் பின்-திராவிட யுகத்தில் நுழைந்திருக்கிறோம்.

திராவிடக் கட்சிகளின் பலம் குறைந்துவிட்டது என்று நான் சொல்லவில்லை. அவர்கள் அடுத்து வரக்கூடிய தேர்தலிலும் வெற்றிபெறப்போகிறார்கள் என்பதிலும் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. ஆனால் வரலாற்று ரீதியாக தார்மீக ரீதியாக அவர்களுடைய காலம் முடிந்துவிட்டது என்றுதான் சொல்கிறேன். இப்போதே தி.மு.கவும் அ.தி.மு.க.வும் அரசியலில் இருப்பது Over Timeவேலைதான். வேறு யாரும் இல்லை, வேறு யாரும் அரசியலில் இல்லை, அதனால் இவர்கள் தொடர்கிறார்கள், இன்னும் சிறிது காலத்திற்குக்கூட இவர்கள்தான் வெற்றிபெறுவார்கள், இவர்களிடம்தான் ஆட்சி இருக்கும் அதில் சந்தேகமில்லை. ஆனால் உண்மையான மாற்று வருவதற்கான கதவு ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. இனி அதை தடுத்து நிறுத்தவே முடியாது. அது எவ்வளவு வேகமாக வரும், எவ்வளவு பலமோடு வரும் என்பதைத்தான் காலம் தீர்மானிக்குமே ஒழிய இவர்கள் இப்படியே இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குத் தொடர்வார்கள் என்பதற்கான எந்த உத்தரவாதமும் கிடையாது.

senthilnaathan6ஆனால் இந்த மாற்று என்பது அவ்வளவு சுலபமாக வராது. மூன்று தலைமுறைகளாக இவர்கள் நம்மை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள். அவர்களது முன்னுரிமைகள்தான் தமிழ்நாட்டின் முன்னுரிமைகளாக மாற்றப்பட்டிருக்கிறது. மொழிப்பிரச்சனையைப் பார்த்தோம் என்றால், இப்பொழுதும்கூட கருணாநிதி நேருவின் வாக்குறுதியை சிலாகித்துப் பேசுகிறார். நேருவின் வாக்குறுதி என்பது வாக்குறுதிகூட கிடையாது. அதை விட பச்சையான ஏமாற்றுத்தனம், வேறு எதுவுமே கிடையாது. சட்டப்பூர்வமாக எனக்கு உரிமை வேண்டும் என்று சொல்வதை விட்டுவிட்டு, நேரு வாக்குறுதி கொடுத்தார், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றால் என்ன அர்த்தம்? நேருவின் வாக்குறுதிக்கு என்ன அரசியல்சாசன பெறுமதி இருக்கிறது? இன்று நடைமுறையில் நிலைமை என்ன?“இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை அவர்கள் மீது இந்தி திணிக்கமாட்டோம்” என்று சொல்வது என்பது பொய் வாக்குறுதி. திமுக பசப்பிக்கொண்டிருக்கிறது.

மத்திய அரசாங்கத்தில் 1989,90லிருந்து பங்கெடுத்த தி.மு.க அல்லது மத்திய ஆட்சிகளை ஆதரித்த அ.தி.மு.க உறுப்பினர்கள் தமிழுக்காக அங்கே என்ன போராடினார்கள்? ஒரு சில விதிவிலக்கான எம்பிகளைத் தவிர? இப்படி எல்லா விஷயங்களிலும் சொல்லிக்கொண்டே செல்ல்லாம்.

தமிழுக்காக தமிழ்நாட்டு மக்களுக்காக, ஈழத்திற்காக, தமிழர்களின் அடிப்படையான எந்த கோரிக்கைகளுக்கும் இவர்கள் எதுவும் செய்வதில்லை என்பது மட்டுமல்லாமல் இவர்கள் ஏற்கனவே மத்திய அரசின் கைப்பாவைகளாக மாறிவிட்டார்கள். கூட்டுக் களவாணிகளாக மாறிவிட்டார்கள். அதை கூடங்குளத்தில் பார்க்கலாம், மீத்தேன் திட்டத்தில் பார்க்கலாம், பல்வேறு விதமான சட்டங்களில் திட்டங்களில் பார்க்கலாம். இன்றைய நிலையில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் எங்களைப் பொறுத்தவரையில் இந்திய தேசிய கட்சிகள்தான், அவர்கள் தமிழ்நாட்டுக் கட்சிகள் கிடையாது. அப்படித்தான் நான் பார்க்க விரும்புகிறேன். ஆக காங்கிரசு, பா.ஜ.க, சி.பி.எம் எல்லாம் இந்திய தேசிய கட்சிகள், திமுக, அதிமுக, திராவிடக் கட்சிகள் என்று சொன்ன காலமெல்லாம் மலையேறிவிட்டது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக இந்தியாவை ஆட்சி செய்யக்கூடிய இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதிகள்தான் தி.மு.க-வும் அ.தி.மு.க-வுமே ஒழிய, அவர்கள் எந்த விதத்திலும் தமிழ்நாட்டு மக்களுக்கானவர்கள் இல்லை.

mukilan nerkaanal7சில சமயங்களில் நம் போராட்டத்தின் நிர்ப்பந்தத்தினால் நமக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கலாம், சட்டமன்றத்தில் சில தீர்மானங்களைப் போடலாம், அல்லது அவர்களும் நம்மோடு சேர்ந்து சத்தம் போடலாம் ஆனால் இவர்கள் நம்முடைய கட்சிகள் அல்ல, நம்முடைய தலைவர்களும் அல்ல, நம்மை பிரதிநிதிப்படுத்தும் கடமையை அவர்கள் துறந்து நெடுங்காலமாகிறது.

இந்த இரண்டு கட்சிகளையும் அடித்து வீழ்த்தாமல் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த மாற்றத்தை செய்வதற்கான  காலம் நெருங்கினாலும் கூட யார் எப்படி செய்வார்கள் என்பதில் ஒரு குழப்பம் இருக்கிறது, ஆனால் இந்த குழப்பம் இருக்கத்தான் செய்யும். குழப்பம் இல்லாமல் தெளிவு வந்துவிடாது. இதற்கு ஒரு காலகட்டம் இருக்கும். ஆனால் நாங்கள் உளமாற உறுதியாக நம்புகிறோம், அந்த காலகட்டம் நெருங்கி கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நாங்கள் இந்தக் கருத்தை பத்தாண்டுக்கு முன்பு பேசியிருந்தால் எடுபட்டிருக்காது. மொழி சார்ந்தோ ஈழம் சார்ந்தோ அல்லது தமிழக மக்களினுடைய உரிமைகள் சார்ந்தோ பத்தாண்டுகளுக்கு முன் பேசியிருந்தால் எடுபட்டிருக்காது. ஆனால் இன்று நிலைமை அப்படி கிடையாது. அது மீத்தேன் திட்டமாக இருக்கட்டும், கூடங்குளம் திட்டமாக இருக்கட்டும், நியூட்ரினோ திட்டமாக இருக்கட்டும், தமிழீழம் தொடர்பாக இருக்கட்டும், மொழிப் பிரச்சனையாக இருக்கட்டும், மூவர் தூக்கு விவகாரமாக இருக்கட்டும் எல்லா பிரச்சனைகளிலுமே நாம் பேசும் பொழுது மக்களுடைய ஆதரவைப் பெறுகிறோம். ஊடகங்களில் புதிய அரசியல் சக்திகள் புறக்கணிக்கமுடியாத சக்தியாக எழுந்திருக்கின்றன. சமூக ஊடகங்கள் இவர்கள் கையில்தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் சொல்லாடல்களை இப்போது தீர்மானிப்பது கருணாநிதிகள் அல்ல, புதிய இயக்கத்தினர்தான்.

தமிழ்நாட்டு வரலாறு என்பது திராவிடக்கட்சிகளைத் தாண்டி சென்றுவிட்டது.

கேள்வி: தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்கள் நிலை எப்படி இருக்கிறது? எப்படி இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்

பதில்: தமிழ்படித்தவர், ஆங்கிலம் படித்தவர் என்று சொல்லும் பொழுது, அது இரண்டு மொழி சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல, சமூகப் பிரிவுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நடுத்தர வர்க்கத்தில், தொடர்ச்சியாக படிப்பு வாசனை உள்ள குடும்பத்திலிருந்து இன்றைக்கு ஒரு குழந்தை பள்ளியில் சேர்கிறது என்றால், அது ஆங்கில வழி கல்வியில்தான் சேரும். அந்தக் குழந்தையின் பெற்றோரின் சமூக மதிப்பீடுகளைப் பொறுத்தே அது அமைகிறது.

தமிழ் வழிக் கல்வி என்பது இன்றைக்கு அரசு பள்ளிகளில்தான் இருக்கிறது அல்லது அரசுக் கல்லூரிகளில்தான் இருக்கிறது. ஒரு சாதாரணமாக ஒரு சிறு நகரத்தில், கிராமத்தில் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியாத அளவுக்குப் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கிய சமூகத்தில் இருக்கக்கூடியவர்கள்தான் தமிழ் வழி கல்வியில் படிக்கிறார்கள். சில விதிவிலக்குகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இவ்வாறுதான் இருக்கிறது. தமிழ் வழிக்கல்வி சமூகப் பிரிவின் இன்னொரு எதார்த்தத்தைக் கொண்டிருக்கிறது.

senthilnaathan8அண்மையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு ஜப்பானில் பணியாற்றும் தமிழ் இளைஞர்கள் சிலர் நூலகம் அமைத்துக்கொடுத்தார்கள். அதன் திறப்பு விழாவுக்கு நண்பர்கள் பேராசிரியர் செல்வகுமார், திரு. மணிமணிவண்ணன் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். ஐந்து வகுப்புகளுக்கு சேர்ந்து ஒரே அறை. ஆயிரம் சதுரடி கொண்ட இடம், அதில் ஐந்து வகுப்புகள் நடக்கின்றன. ஒரே ஹாலில்! ஐந்து வகுப்புகளுக்கும் சேர்த்து இரண்டே ஆசிரியர்கள்தான். இது 2015ல் நான் பார்த்தது. அந்தக் குழந்தைகளுக்கும் இங்கே சென்னையில் டிஏவி பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தைக்கும் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வீர்களா? அல்லது அந்தக் குழந்தைகளும் அந்தக் கிராமத்தின் அருகில் உள்ள நகரத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கிற குழந்தைகளும்கூட ஒன்றல்ல. மூன்று நான்கு பிரிவுகளாகத் தமிழ்ச்சமூகம் பிரிந்திருக்கிறது. கல்வியும்தான்.

ஆக ஆங்கில வழிக் கல்வியில் படிக்கக்கூடியவர்களின் வர்க்கம் வேறு. தமிழ் வழிக் கல்வியில் படிக்கக்கூடியர்களின் வர்க்கம் வேறு.

senthilnaathan10வர்க்க வித்தியாசம் இருக்கிறது. சாதி வித்தியாசமும் இருக்கிறது. உயர்சாதிக்காரர்கள், இடைநிலைச் சாதிக்காரர்கள் பெரும்பாலும் ஆங்கில வழியில் படிக்கிறார்கள், தமிழ்வழியில் படிக்கக்கூடிய குழந்தைகள் பெரும்பாலும் பின்தங்கின சமூகங்களி லிருந்து ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வரக்கூடியவர்கள்தான். வர்க்க ரீதியாக, சாதி ரீதியாக, இடம் சார்ந்த நகரம், கிராமம் இப்படியெல்லாம் வித்தியாசம் வந்து அதோடு சேர்ந்த மொழியும் வரும்பொழுது நாம் மிகமோசமான ஒரு சூழலில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்வழியில் படிக்கக்கூடிய ஒரு குழந்தை தமிழ்வழியில் படிப்பதால் பின்தங்கிப் போகவில்லை. அது பின்தங்கிய நிலையில் இருப்பதால்தான் தமிழ் வழியில் படிக்கிறது.

தமிழர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் தமிழுக்கு அதிகாரம் வராமல் தமிழர்களுக்கு அதிகாரம் வராது. தமிழுக்கான அதிகாரம் என்றால் செம்மொழி அங்கீகாரம் அல்ல. அறிவின் மீது, தகவல் மீது நமக்கான அதிகாரம். கல்வியின் மீது நமக்கான அதிகாரம். அதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். ஒட்டுமொத்தமாக தமிழ்ச்சூழலுக்கு அதிகாரம் வரக்கூடிய நிலைமை இல்லாமல் தனிப்பட்ட முறையில் ஒரே ஒரு தமிழனுக்கு மட்டும் அதிகாரம் வந்துவிடாது. நம்மில்; ஒரு சிலர் மட்டும் ஏதோ வாழ்க்கையில் உயர்ந்துவிட்டோம் என்பதால் அது பெரிய வளர்ச்சி என்று சொல்லிவிடமுடியாது, ஒவ்வொரு தனிப்பட்ட தமிழனும் சரி, சமூகமும் சரி நாம் உலகத்தில் வளர்ந்த நாடுகளுக்குச் சமமாக நாமும் சிறப்பாக வளரவேண்டும் என்று நினைக்கிறோம் என்றால் நம்முடைய கொள்கைகளில் எல்லாமே மாற்றங்கள் தேவைப்படுகின்றது.

tamilநம்முடைய அரசியல், பொருளாதார, கலாச்சார, கல்வி, தொழில் சார்ந்த எல்லா கொள்கைகளிலுமே பல மாற்றங்கள் தேவைப்படுகிறது. ஆனால் எந்த மாற்றமும் மொழி சார்ந்த கொள்கைகளில் மாற்றம் இல்லாமல் சாத்தியமில்லை. ஆக தமிழ் மொழிக்கு அதிகாரம் பெறுவதற்கான, தமிழை நிர்வாக மொழியாக, வணிக மொழியாக, கல்வி மொழியாக, நம்முடைய பண்பாட்டு மொழியாக, நம்முடைய தகவல்தொடர்பு மொழியாக முழுமையாக மாற்றாமல், நாம் வெற்றிபெறுவது என்பது சாத்தியமில்லாத விடயம். என்னதான் ஆங்கிலம் படித்து மேலே சென்றிருந்தாலும் கூட அது இந்த சமூகத்தில் ஐந்து முதல் பத்து சதவிகித மக்களின் வளர்ச்சிதானே ஒழிய 90 சதவிகித மக்களுக்கு அது வளர்ச்சி அல்ல. 90 சதவிகித மக்கள் வளராத ஒரு சமூகம் எப்படி வளர்ந்த சமூகமாக மாற முடியும்? பத்து சதவிகித வளர்ச்சி என்பது எல்லா சமூகங்களிலும் எல்லா காலங்களிலும் சாத்தியம்தான். அதற்கு ஒரு நாடு வளர்ந்த நாடாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. எல்லா சமூகங்களிலும் அது சாத்தியம்தான். வளர்ந்த சமூகம் என்றால் பெரும்பான்மையான மக்கள் வளர்ந்த சமூகமாக இருப்பது என்றுதான் அர்த்தம். சேரிகள் சேரிகளாக இருக்கும்வரையில் தமிழகத்தின் சமூகப்பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுவதில் ஒரு பைசாவுக்கு பிரயோசனமில்லை.

ஆனால் உண்மையிலேயே இந்த சமூகம் வளரவேண்டும் என்றால் நாம் உலகத்தினுடைய அத்தனை அறிவுச்செல்வத்தையும் தமிழில் கொண்டுவரவேண்டும், தமிழிலேயே அவற்றை பயன்படுத்தவேண்டும். அதற்கான அதிகாரத்திற்காகப் போராட வேண்டும். தமிழின் அதிகாரமும், தமிழனின் அதிகாரமும், தமிழ்நாட்டின் அதிகாரமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது. இந்தப் போராட்டத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களால் முடிந்த ஏதோ ஒரு விதத்தில் பங்கெடுக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எல்லோரும் களத்தில் இறங்கிப் போராட முடியாமல் போகலாம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருக்கலாம். ஆனால் இந்தப் போராட்டங்களுக்கு உதவி செய்வதன் மூலமாக, போராட்டங்களைப் பற்றிய தகவல்களை பரவச்செய்வதன் மூலமாக இந்தப் போராட்டத்திற்கான அடிப்படையை வலுவூட்டுவதன் மூலமாக இதை நிச்சயமாக செய்யமுடியும்.

சிறு துளி பெருவெள்ளம் என்று சொல்வதைப்போல ஒவ்வொரு தமிழரும் சிறிய சிறிய பங்களிப்புகளைச் செய்வதன் மூலமாக, தமிழ் அதிகாரத்திற்கான இந்தப் போராட்டத்தை நாம் பெரிய அளவிற்குக் கொண்டு செல்லமுடியும் என்று நம்புகிறோம். அந்தப் பங்கேற்பை உறுதிசெய்வீர்கள் என்றால் நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம். நாம் என்றால் நீங்களும் நானும் நம்மைச் சார்ந்த அனைவரும் சேர்ந்ததுதான். நாம் அனைவரும் வெற்றிப்பெறுவதற்கான போராட்டத்தில் கைகோர்த்து நிற்கமுடியும் என்பதை மனப்பூர்வமான நம்புகிறேன். இந்த நம்பிக்கையோடு உங்களுடைய பங்களிப்பை வரவேற்கிறேன்.

senthil nathan 3குறிப்பாக வரும் செப்டம்பர் 19,20 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள மொழியுரிமை மாநாட்டுக்கு உங்களை அழைக்கிறோம், உங்கள் ஆதரவைக் கோருகிறோம். தமிழை இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஆக்குவது உள்ளிட்ட அடித்தள கோரிக்கைகளுக்கான மாநாடு அது. மத்திய மாநில தனியார் நிறுவனங்களில் தமிழின் பயன்பாடு, தமிழ் மொழி ஆணையம் அமைத்தல் ஆகியவற்றை அது உள்ளடக்கியது. தமிழ் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள வேறு பல மொழிப்போராளிகளையும் இணைத்து இந்த மாநாட்டில் நமது கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம். தமிழ்நாட்டில் நான்காம் மொழிப்போர் தொடங்கவேண்டும். அதனால்தான் இந்த ஆண்டை மொழிப்போர் ஆண்டாக பிரகடனப்படுத்தியிருக்கிறோம்,

சிறகிற்காக நேர்காணல் அளித்தமைக்கு மிக்க நன்றி.

ஆழி செந்தில்நாதன் மின்னஞ்சல் முகவரி: ZSENTHIL@GMAIL.COM

The danger tinder www.besttrackingapps.com poses isn’t just virtual it’s within arm’s reach.


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது