மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டி முகாம்



Mar 1, 2017

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று வழிகாட்டும் வகையில் ‘கேரியர் கைடன்ஸ் கவுன்சலிங்’ தரப்படும். இத்திட்டம் மாநிலம் முழுக்க 541இடங்களில் நடத்தப்பட உள்ளது.

Siragu students

இந்த முகாம் மேல்நிலைப்பள்ளிகளில் நடத்தப்படும். இதில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு உணவு மற்றும் குடிநீரை தொண்டு நிறுவங்கள் வழங்குவார்கள். இந்த முகாம் ஏப்ரல் 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும். மாணவர்களின் வசதிக்கேற்ப ஏதாவது ஒரு நாளில் கலந்து கொள்ளலாம்.

இந்தியாவில் முதன்முறையாக இத்திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்துள்ளோம், மேலும் மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டி முகாம்”

அதிகம் படித்தது