மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பரோட்டா

பாத்து முத்து

Sep 1, 2011

பெயரை நினைத்த உடனே பசியை உண்டுபண்ணி சாப்பிடத் தூண்டும் ஒரு சில சுவை மிக்க உணவுகளில் பரோட்டாவிற்கு தனி இடம் உண்டு. பரோட்டாவின் சுவை மட்டுமல்ல மிருதுவான அதன் தன்மையும், மயக்கும் வாசனையும், அழகான அடுக்கடுக்கான வட்ட வடிவமும் சிறப்புகளே.

சிறு குழந்தைகளாக  நாம் இருக்கையில் கடைகளில் இருந்து அப்பா வாங்கி வந்தவுடன்  வாழை இழை வாசனையுடன் கலந்த சூடான பரோட்டா  உண்ட ஞாபகம்  நினைத்தாலே  சுகமோ சுகம்.
சில பேருக்கு தினமும் இரவு உணவாக பரோட்டா கண்டிப்பாக வேண்டும். முக்கியமாக நம் தமிழ்க் குடும்பங்களில்  பண்டிகை நாட்களிலும் , விருந்தாளிகள் வந்த நாட்களிலும்  தயாரிக்கப்படும் சிறப்பு உணவு பரோட்டா. பரோட்டாவும் கோழி குழம்பும் நினைத்தாலே நாவூரறும்.  பரோட்டா எந்த குழம்பு தொட்டு சாப்பிட்டாலும் சுவைதான் ஆட்டுக்கறி குழம்பு , மீன் குழம்பு, சுக்கா, வறுவல், காய்கறி குருமா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  அட வெள்ளைக்காரங்க கூட தேன், சீனி, மேப்பில் சாறு தொட்டு நம்ப பரோட்டாவை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தியாவில் வட மாநிலமான பஞ்சாபில் இருந்து உருவான உணவு தான் பரோட்டா. பொதுவாகவே கோதுமைப் பண்டங்கள் தான் அதிகம் உண்டுவந்தனர் வட மாநிலத்தினர். இரண்டாம் உலகப் போர் பஞ்ச காலங்களில் கோதுமைப் பற்றாகுறையால் மைதா பயன்படுத்தி தயாரிக்கப் பட்ட உணவே பரோட்டா. அதற்குப் பின் மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்திலும் பரவலாகப் பயன்படத் தொடங்கின. அதில் பரோட்டா எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விட்டது.   மிருதுவான, மென்மையான, அடுக்ககடுக்கான பரோட்டா எல்லோர் மனதிலும் தங்கி விட்டதில் வியப்பு ஏது?

இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் குடியேறியவர்கள் தம்முடன் இந்த பரோட்டா சுவையையும் எடுத்து  சென்று பரப்பிவிட்டனர்  . இலங்கை,மலேஷியா, பர்மா போன்ற நாடுகளுக்குப் பிழைக்கச் சென்றவர்கள் அங்கும் இதன் சுவையை  மறக்கமுடியாமல் சமைத்து உண்டு பிறருக்கு பகிர்ந்து பரப்பிவிட்டனர். இன்று  நம் நாடு தவிர்த்து பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கூட பரோட்டா கிடைக்கிறது.

பரோட்டா வட்ட வடிவாக மட்டும் இன்றி, முக்கோணம், செவ்வக வடிவிலும் தயாரிக்கப் படுகிறது. சிலோன் வீச்சு பரோட்டா செவ்வக வடிவில் இருக்கும். சில ஊர்களில் தோசைக் கல்லில் சுடுவதற்கு பதில் வாணலியில் என்னை ஊற்றி பூரி பொரிப்பது போல் பரோட்டாவைப் பொரித்தெடுப்பார்கள்.

பரோட்டாக்களில் பலவகை உண்டு ஒவ்வொன்றும் தனி சுவை. முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா, மிளகாய் பரோட்டா, கைமா பரோட்டா மலபார் பரோட்டா  என்று இன்னும் பலவகைகள் இருக்கின்றன.  இனி வீட்டிலேயே எப்படி இதை எளிதாக செய்வது என்பதையும் பார்க்கலாம்.

பரோட்டா  செய்முறை

தேவையான பொருட்கள்

மைதா – 1 கிலோ

எண்ணெய் – 250 ml

உப்பு – தேவையான அளவு

செய்முறை : முதலில் மைதாவில் தேவையான அளவு உப்பு போட்டு, ஐந்து  மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி மாவும் உப்பும் எண்ணெயும் நன்கு கலக்குமாறு  பிசைந்து கொள்ளவும்.

பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் கொ‌ஞ்ச‌ம் தளதளவெ‌ன்று பிசைந்துகொள்ளவும் . ‌பி‌ன் அரை மணி நேரம் ஊற‌வி‌டவு‌‌ம். மாவு மிருதுவாக வர சுடு நீரில் மாவு பிசையலாம். சில கடைகளில் பரோட்டா மாவுடன் சிறிது சர்க்கரை மற்றும் முட்டை சேர்த்து பிசைவார்கள். இன்னும் சில இடங்களில் மென்மையாக இருக்க மாவுடன் சிறிது சமையல் சோடா சேர்த்து பிசைவார்கள்.

பிசைந்த மாவை பின் சிறு சிறு உருண்டைகளாகப் பிரித்து உருட்டிக் கொள்ளவும். ஒரு கிலோ மாவுக்கு பத்து முதல் பதினைந்து  உருண்டைகள் பிரிக்கலாம். எல்லா உருண்டைகள் மீதும் பரவலாக எண்ணெய்  தடவி ,ஒரு வெள்ளைத்துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்துவிட்டு அதன் மீது போட்டு  கால் மணி நேரம் மூடிவைக்கவும்.

பின் அகலமான பரோட்டா பலகையில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து அகலமாக கண்ணாடி போல் மெலிதாக சப்பாத்தி பரத்துவது போல் பரத்தவும். எவ்வளவு மெலிதாக மற்றும் பெரிதாக பரத்துகிறீர்களோ அவ்வளவு சுவையுடன் வரும். பரத்திய சப்பாத்தியை இருபக்கமும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடித்துக்கொண்டு வட்டமாக சுருட்டிக்கொள்ளவும். இவ்வாறு எல்லா உருண்டைகளையும் செய்து வைத்து அதன்மேல் திரும்பவும் ஈரத்துணியை போட்டு மூடி வைக்கவும்.

பின் கால்மணி நேரம் கழித்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு உருண்டைகளையும் விசிறி மடிப்புகள்  கலையாமல் கைவிரல்களால் தட்டியோ அல்லது சப்பாத்தி கட்டையால் பரத்தியோ  சூடான தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் பொன் நிறமாக சிவக்க சுட்டு எடுக்கவும். சுடும் போது நெய் அல்லது எண்ணெய் தாராளமாக ஊற்றி சுட்டு  எடுத்தால் பரோட்டா கடைகளில் வருவது போல் முறுகலாக மென்மையாக வரும். பரோட்டாகளை சுட்டெடுத்த பின் அவைகளை ஒன்றன் மேல் ஒன்றாக தட்டில் அடுக்கி இரு கைகளால்  நன்கு அடித்து தட்டி பரிமாறினால் மென்மையாக இருக்கும்.


பாத்து முத்து

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “பரோட்டா”
  1. Bala says:

    White flower is not good for the heart. The commercial produced Parotta was prepared with palm oil which has high saturated fat content.
    Avoid white flower, white sugar, white rice. They are not good for the body. Please avoid such stories. People nowadays want to be healthy and certainly and your essay will not help. This is waste. Add something good information for your health like lingan berry, kiwi fruit, nuts etc.,

  2. முத்துக்குமார் says:

    நாக்கில் எச்சில் ஊறுகிறது. மைதா உடம்பிற்கு மிகவும் கெடுதல் தரும் உணவு, மேலும் பரோட்டாவை அடிக்கடி உண்ணவும் கூடாது, அதுவும் தினமும் சாப்பிடுவது உடம்பில் பல சிக்கல்களை கொண்டு வரும். இதைப்பற்றிய விழிப்புணர்வு கொண்டுவர நம் தளத்தில் முயலலாமே.

  3. kannamma says:

    ungaL pathivu mikavum arumaiyo arumai sariyaka pathivu seithu irukkireerkal thozhar…nanrikaL pala menmelum sirakka vaazhththukal…

    thozhar basheer thakavalukku adutha murai sirakil sirakkattum…

    nanRi
    vanakkam
    lkannamma

  4. basheer says:

    பரோட்டா எனக்கும் மிக பிடித்த உணவு தான்.ஆனால் இதை தயாரிக்க பயன்படுத்தப்படும் மைதா மாவில் நச்சு கலந்திருப்பதாக சில கட்டுரைகளில் படித்திருக்கிறேன்.இதன் காரணமாகவே ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மைதா மாவுக்கு தடை இருப்பதையும் படித்தேன்.அது பற்றிய தெளிவான ஒரு பதிவை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    நன்றி.

அதிகம் படித்தது