மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை டிபாசிட் செய்வதற்கு இன்றே கடைசி நாள்



Dec 30, 2016

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என நவம்பர் 8ம் தேதி அறிவித்தார் பிரதமர் மோடி. பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டிபாசிட் செய்வதற்கு டிசம்பர் 30 கடைசி நாள் என்றும் அறிவித்தார். அதன்படி பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்துவதற்கு இன்றே கடைசி நாளாகும்.

A man deposits his money in a bank in Amritsar

அதனால் இன்று வங்கிகளில் வழக்கத்தை விட அதிகமாக மக்கள் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுக்களை டிபாசிட் செய்யலாம் எனவும், பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்ததற்கான காரணத்தையும் ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

ஜனவரி 1 முதல் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.

பழைய ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31க்குப் பிறகு வைத்திருந்தால் ஐம்பதாயிரம் அபராதம் என்றும், நான்கு ஆண்டு சிறை தண்டனை என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த அவசர சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருந்ததால், சிறை தண்டனையை ரத்து செய்தது, மேலும் அபராதம் பத்தாயிரம் விதிக்கப்படும் என்றும் அறிவித்தது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை டிபாசிட் செய்வதற்கு இன்றே கடைசி நாள்”

அதிகம் படித்தது