மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாகிஸ்தான் தூதரக அதிகாரி கைது



Oct 27, 2016

இந்தியாவின் பாகிஸ்தான் தூதராக அப்துல் பஷீத் என்பவர் இருந்து வருகிறார். இவரது அலுவலகத்தில் உதவியாளராக முகம்மது அக்தர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

siragu-pakistan

இந்திய உளவுத்துறை அளித்த தகவலால் முகம்மது அக்தர் கைது செய்யப்பட்டார். இவர் இந்திய இராணுவம் சம்பந்தப்பட்ட கோப்புகளுடன் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் இவர் பாகிஸ்தானுக்கு உளவு அளித்ததாக தெரிய வருகிறது.

இவரை கைது செய்ததால் பாகிஸ்தான் திட்டமிட்ட சதித்திட்டம் முறியதிக்கப்படும் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இவர் நாளை மறுநாளுக்குள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாக்., தூதரக அதிகாரியை இந்தியா கைது செய்ததையடுத்து பாகிஸ்தான் இச்செயலை கண்டித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் தூதரக அதிகாரியை தரக்குறைவாக நடத்தியதற்கும், கைது செய்ததற்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாகிஸ்தான் தூதரக அதிகாரி கைது”

அதிகம் படித்தது