மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாரத ஸ்டேட் வங்கி: பாதுகாப்பு பெட்டகம், காசோலை வசதிகளுக்கும் கட்டண உயர்வு



Apr 4, 2017

தற்போது பாரத ஸ்டேட் வங்கி, புதிய மாதாந்திர சராசரி இருப்பு தொகையை அறிவித்தது. அந்த இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அபராத கட்டணம் வசூல் செய்யப்படும் என்று கூறியுள்ளது.

Siragu sbi

அதன்படி பெருநகரங்களில் ரூ.5000ம், நகரங்களில் ரூ.3000ம், சிறு நகரங்களில் ரூ.2000ம், கிராமங்களில் ரூ.1000ம் இருப்புத்தொகை இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு கொடுக்கப்பட்ட இருப்புத்தொகை இல்லாவிட்டால் 50 முதல் 100 வரை வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்த நடவடிக்கை ஏப்ரல் 1 முதல் பின்பற்றப்பட உள்ளது.

மேலும் பாதுகாப்பு பெட்டகத்திற்கான வாடகை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை ஆண்டுக்கு 12 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்தலாம், அதற்குமேல் பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் ரூ.100 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் 25 காசோலை கொண்ட புத்தகத்திற்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கபடுகிறது. 50 காசோலைகளை இலவசமாக பயன்படுத்தலாம், அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு காசோலைக்கும் ரூ. 3 வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது இந்த வங்கி.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாரத ஸ்டேட் வங்கி: பாதுகாப்பு பெட்டகம், காசோலை வசதிகளுக்கும் கட்டண உயர்வு”

அதிகம் படித்தது