மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று முடிவடைந்தது



Feb 9, 2017

தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.

Siragu palamedu jallikattu

இப்போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இப்போராட்டத்தினால் ஜனாதிபதி ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்றப்பட்டது. இதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

இதன் வரிசையில் பாலமேட்டில் இன்று(09.02.17) ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் 354 காளைகள் பங்கேற்றன. காலை 9 மணிக்கு துவங்கிய இந்த ஜல்லிக்கட்டு மாலை 4 மணி வரை நடைபெற்றது.

இதில் மூன்றாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நிறைவாக மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் மாடு பிடித்த வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி, நன்றி தெரிவித்து நிறைவு செய்தார்.

நாளை(10.02.17) உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று முடிவடைந்தது”

அதிகம் படித்தது