மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புற்றுநோயாளிகளின் ஆதரவாளர் மருத்துவர் சாந்தா

சிறகு நிருபர்

Feb 6, 2021

siragu santha1

பணம் ஈட்டும் தொழிலாக மருத்துவத்தை நினைக்கும் இக்காலகட்டத்தில் மருத்துவத்தை சேவையாக செய்து வந்தவர் மருத்துவர் சாந்தா. சென்னை மயிலாப்பூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பட்டம் பெற்றார்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியவர், பெருமுயற்சிக்குப்பின் 1954 ல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய புற்றுநோய் நிறுவத்தில் இணைந்தார். அக்காலத்தில் புற்றுநோயினால் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். இதைக்கண்டு வருந்திய மருத்துவர் சாந்தா புற்றுநோய் சிகிச்சை முறைகளை கற்றுக்கொண்டார்.

தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் பல நோயாளிகள் இம்மையத்திற்கு வந்து பயணடைந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் இரண்டு படுக்கை, இரண்டு மருத்துவர், நான்கு ஊழியர்களுடன் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை தற்போது 130 மருத்துவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஆண்டுக்கு ஒரு லட்சம் நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர். 1977 ல் புற்றுநோய் நிறுவனத்தின் தலைவரானார். புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு இலவசமாக சேவை செய்து வருகிறது இம்மையம்.

மக்சேசே விருது, பத்மசிறீ, பத்ம விபூசண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மருத்துவர் சாந்தா பெற்றுள்ளார். எளிமை, அனைவரிடமும் மென்மையாக பழகக்கூடிய தன்மை கொண்ட மருத்துவர் சாந்தா 67 ஆண்டுகளாக தன்னுடைய சேவையை செய்து வந்தார். அயராது உழைத்த மருத்துவர் சாந்தா உடல் நலக்குறைவு காரணமாக சனவரி 19 2021 ல் காலமானார்.

 

 

 


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புற்றுநோயாளிகளின் ஆதரவாளர் மருத்துவர் சாந்தா”

அதிகம் படித்தது