மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 24 இரவு வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும்



Nov 14, 2016

நவம்பர் 8ந்தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், இந்த நோட்டுக்களை இன்று (நவம்பர் 14) வரை பெட்ரோல் பங்குகள், சுங்கச்சாவடி, மருத்துவமனைகளில் செல்லுபடியாகும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

siragu-rupees1

மக்கள் மத்தியில் பண புழக்கம் அதிகமாகாததால் இம்மாதம் 24ந்தேதி வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட இடங்களில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனையில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை இன்று டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்தார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 24 இரவு வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும்”

அதிகம் படித்தது