மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பேரறிவாளன் கடிதம் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை



Dec 1, 2016

முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். எனினும் இவர்களது விடுதலை கேள்விக்குறியாகவே உள்ளது.

siragu-perarivaalan

பேரறிவாளனும் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார். எனினும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் பேரறிவாளன் மத்திய அரசுக்கு விடுதலை கோரி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பேரறிவாளன் கடிதம் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை”

அதிகம் படித்தது