மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பொடுகுத் தொல்லையைப் போக்க வழிமுறைகள்

சிறகு சிறப்பு நிருபர்

Jan 30, 2016

podugu5

  1. வெந்தயப் பொடியை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லைதீரும், உடலின் வெப்பம் குறையும்.
  2. அருகம்புல் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிஎடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினசரி தலையில்தேய்த்தால் பொடுகு மறையும்.
  3. வேப்பிலை சாற்றையும், துளசிச் சாற்றையும் கலந்து தலையில் தேய்த்தால்பொடுகு நீங்கும்.
  4. அரைத்த மருதாணி இலையுடன் சிறிது தயிர், சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து இக்கலவையை தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகுமறையும்.
  5. பசலைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை குறையும்.
  6. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை சேர்த்து, அந்த எண்ணெயைதொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
  7. சின்ன வெங்காயத்தை சிறிதளவு எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து வந்தால் பொடுகு மறையும்.
  8. தலைக்கு வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் பொடுகிலிருந்து விலகலாம்.
  9. வசம்புப் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்ப்பது பொடுகுக்குநல்லது.
  10. வேப்ப எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை, கலந்து தேய்த்து வர பொடுகுத்தொல்லை நீங்கும்.
  11. தலையில் தயிர் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகு மறையும்.
  12. தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை பழத்தின் தோலை போட்டு ஒன்பது நாட்கள் ஊற வைத்து, பிறகு அந்தஎண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.
  13. ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாற்றை சேர்த்து நன்றாகக் கலந்து தலைக்குதேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொடுகுத் தொல்லையைப் போக்க வழிமுறைகள்”

அதிகம் படித்தது