மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பொதுமக்கள் தொடர்ந்து மதுக்கடைக்கு எதிராகப் போராட்டம்



May 20, 2017

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை மூடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள 3500 மதுக்கடைகள் மூடப்பட்டது.

Siragu tasmac

மதுக்கடைகள் மூலமாக அதிகமாக வருமானம் ஈட்டிய தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை கிராமத்தில் திறப்பதற்கு ஏற்பாடு செய்தது. ஆனால் கிராமத்தில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்காக பெண்கள் உட்பட பொதுமக்கள் போராட்டம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

மதுக்கடைக்கு எதிராகப் போரிடுவோரை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மதுக்கடையை அகற்றக்கோரி வேலூர் மாவட்டம்ஆம்பூர் அருகே உள்ள அழிஞ்சிக்குப்பத்தில் போராட்டம் நடைபெற்றது. போலீசார் பேச்சுவாரத்தை நடத்தியும் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடிநடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் இரண்டு மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இக்கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் காவல்துறை ஆணையர், தாசில்தார், டிஎஸ்பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுக்கடையை மூட 15நாட்கள் அவகாசம் கோரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் அதனை எழுதி கையெழுத்திட்டு தருமாறு கேட்டனர். ஆனால் அதனை மறுத்ததால் அங்குள்ள தனியார் மண்டபத்தில் அந்த மூன்று அதிகாரிகளையும் அடைத்து வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொதுமக்கள் தொடர்ந்து மதுக்கடைக்கு எதிராகப் போராட்டம்”

அதிகம் படித்தது