மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மஞ்சளின் மருத்துவ குணங்கள்

சிறகு நிருபர்

May 30, 2020

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரானா வைரஸ் அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக்கொள்வது அவசியம். அதில் முக்கிய பங்கு வகிக்கிறது மஞ்சள். மஞ்சளின் மருத்துவ குணங்களைப் பார்க்கலாம்.

siragu manjal1

1. நமது உடம்பைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போடாடும் குணம் மஞ்சளுக்கு உண்டு.

2. சிறந்த கிருமி நாசினியான மஞ்சள் வெட்டு காயங்கள், தீக்காயங்கள், புண்கள் போன்றவற்றை குணமாக்கும்.

3. பல மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இம்மஞ்சளை முகத்தில் பூசி வர முகப்பருக்கள், கொப்புளங்கள் குணமாகும்.

4. மஞ்சளை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும், இதய நோயை கட்டுப்படுத்தும்.

5. பூச்சி உள்ள பற்களில் மஞ்சளை தடவி வந்தால் பூச்சி அழிந்து பற்கள் அரிப்பைக் குறைத்து விடும்.

6. மஞ்சளை உட்கொள்வதனால் சளி தொந்தரவு, மூக்கடைப்பு சரியாகும்.

7. மஞ்சள் கலந்த நீரை காய்ச்சி, அதில் வாயை கொப்பளிக்க தொண்டைப்புண் சரியாகும்.

8. பெண்கள் பிரசவத்திற்குப் பின் இம்மஞ்சளை எடுத்துக்கொண்டால் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட தளர்ச்சி குறையும், வயிறை இறுக உதவுகிறது.

9. மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் அரைத்து உடலில் ஏற்படும் வீக்கம், கட்டிகளில் பூச குணமாக்கும்.

10. மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்து தேய்த்துவர அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகளும் குணமாகும்.

 

 

 

 


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மஞ்சளின் மருத்துவ குணங்கள்”

அதிகம் படித்தது