மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் மீது தாக்குதல்: கண்டித்து போராட்டம்



Apr 19, 2017

தமிழகம்முழுவதும் டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். அவ்வகையில் சென்ற 11ம் தேதியன்று திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் டாஸ்மாக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

Siragu thiruppur struggle

இப்போராட்டத்தில் பெண்கள் உட்பட பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர். டாஸ்மாக் கடை மூடப்படும் என்று அதிகாரிகள் உறுதிஅளித்தனர். உறுதி அளித்தும் மக்கள் கலைந்து செல்லாததால் காவல் அதிகாரிகள் தடியடி நடத்தினர்.

இதில் போராட்டம் நடத்திய பெண்களில் ஒரு பெண்ணை கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ஏடிஎஸ்பி பாண்டியராஜன். இத்தாக்குதலுக்கு கண்டனங்கள் பல எழுந்துள்ளன.

தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீதும், இவர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசையும் கண்டித்து திருப்பூரில் அனைத்துக்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் மீது தாக்குதல்: கண்டித்து போராட்டம்”

அதிகம் படித்தது