மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: கிராமத்தில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்



Apr 19, 2017

இந்தியாவில் உள்ள கிராமத்தில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு எந்த வித பிணையமும் இன்றி ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் வீதம் 3-5 வருடங்களுக்குள் அனைத்து கிராம மக்களுக்கும் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.

Siragu loan1

தற்போதைய கணக்கெடுப்பின்படி இந்திய கிராம பகுதிகளில் 8.5கோடி குடும்பங்கள் ஏழ்மையில் உள்ளது. இந்த அனைத்துக் குடும்பங்களையும் இத்திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இத்திட்டத்தின் படி வருடத்திற்கு அறுபதாயிரம் ஒதுக்கவுள்ளது. மேலும் இத்திட்டம் 2019 வரை தொடரும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கிராம மக்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும் என்றும், இதன் மூலம் பயன்பெருவோர்களின் திறமை மற்றும் உழைப்பு இந்திய பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய அளவில் பங்காற்றும் என்று கிராம வளர்ச்சித் துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: கிராமத்தில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்”

அதிகம் படித்தது