மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க முடிவு



Dec 9, 2016

ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வந்தது. சென்ற 2014ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் எனவும், மைசூரு, கொச்சி, ஜெய்ப்பூர், புவனேஸ்வர் மற்றும் சிம்லா போன்ற இடங்களில் பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்கப்பட்டு சோதனைக்காக வெளியிடப்படும் என அறிவித்தது மத்திய அரசு.

siragu-parliament

பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டால் அதேபோல் போலியான நோட்டுகள் அச்சடிப்பது கடினம் மற்றும் இந்த வகையான ரூபாய் நோட்டுகளை சுத்தமாக வைத்திருக்க முடியும் போன்ற காரணங்களுக்காக இந்த அறிவிப்பு எழுந்தது.

பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலக்கூறுகளால் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என எழுத்துப்பூர்வமாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் லோக்சபாவில் அளித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க முடிவு”

அதிகம் படித்தது