மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: பெட்ரோல் பங்குகளில் கார்டு பரிவர்த்தனைக்கு சேவை வரி கிடையாது



Jan 9, 2017

வரி ஏய்ப்பை கட்டுப்படுத்த டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கிறது மத்திய அரசு. இதையடுத்து பெட்ரோல் பங்குகளில் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 0.75 சதவிகிதம் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது.

siragu-petrol

இதையடுத்து வங்கியிலிருந்து பெட்ரோல் பங்கிற்கு மின்னஞ்சல் மூலம் கார்டு பரிவர்த்தனைக்கு 1 சதவிகிதம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவித்தது. இதன் காரணமாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நேற்றிரவு(08.01.2017) முதல் கார்டு மூலமான பரிவர்த்தனையை நிறுத்தி அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் ஜனவரி 13க்குப் பிறகும் பெட்ரோல் பங்குகளில் கார்டு பரிவர்த்தனைக்கு சேவை வரி கிடையாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தெரிவித்துள்ளார். இதனால் பெட்ரோல் பங்குகள் மீண்டும் கார்டு பரிவர்த்தனைக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: பெட்ரோல் பங்குகளில் கார்டு பரிவர்த்தனைக்கு சேவை வரி கிடையாது”

அதிகம் படித்தது