மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: பொழுதுபோக்கு மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு



May 24, 2017

இந்தியா முழுவதும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி வரி ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Siragu-GST-Bill

அதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என்ற நான்கு விதமான ஜி.எஸ்.டி வரிகள் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் 1200 வகையான பொருட்களும், 500 வகையான சேவைகளும் உள்ளது.

அதில், சினிமா அரங்குகளில் வெளியிடப்படும் சினிமா படங்களுக்கு இதுவரை 100 சதவீதமாக இருந்ததை 28 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளுக்கான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சர்க்கஸ், நாடக அரங்குகள், கிராமிய நடனம், நாடகங்கள் உள்ளிட்ட இந்திய கலாச்சார நடன நிகழ்ச்சிகள் மீது 18 சதவீதம் மட்டுமே விதிக்கப்படுகிறது.

சிமெண்ட் மீதான ஜி.எஸ்.டி வரி 31 சதவீதமாக இருந்தது. இது தற்போது 3 சதவீதம் குறைக்கப்பட்டு 28 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் மீதான வரி 12 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் மீதான ஜி.எஸ்.டி வரி 13.5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: பொழுதுபோக்கு மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு”

அதிகம் படித்தது