மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: வாகனங்களில் இனி சிவப்பு விளக்குக்கு தடை



Apr 20, 2017

எந்த வாகனங்களிலும் சிவப்பு விளக்கு இருக்காது என்றும், இதில் எந்த விதி விலக்கும் இல்லை என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். யாரெல்லாம் சிவப்பு நிற விளக்குகளை பயன்படுத்த முடியும் என்பதை நிர்ணயிக்க, மத்திய மாநில அரசுகளை அனுமதிக்கும் சட்டம் நீக்கப்படுகிறது என்றும் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

Siragu red-beacon

சிவப்பு விளக்குகளை பயன்படுத்தி வி.ஐ.பி.-க்கள் தங்கள் அந்தஸ்தைக் காட்டிக் கொள்வதற்காக போக்குவரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்ற விமர்சனம் எழுந்தது.

புதிய விதியின்படி மருத்துவ உதவி ஊர்திகள், தீயணைப்பு வண்டிகள், அவசர வாகனங்கள் மற்றும் காவல்துறை வாகனங்கள் மட்டும் நீல நிற விளக்குகளை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: வாகனங்களில் இனி சிவப்பு விளக்குக்கு தடை”

அதிகம் படித்தது