மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மனித வேட்டை (கவிதை)

ராஜ் குணநாயகம்

Mar 5, 2022

siragu manitha vettai1

 

நாம்

நவீன யுகத்தில் வாழ்வதாக

புளகாங்கிதம் அடைகின்றோமே

உண்மைதானா?

 

கற்கால மனிதன்

கற்கள், கூரிய ஆயுதங்கள் கொண்டு

உணவுக்காக

மிருகங்களை வேட்டையாடினான்

 

தற்காலத்தில்

புதிதுபுதிதாய் கொடிய ஆயுதங்கள்

பல உருவாக்கி

மனதர்களையே வேட்டையாடும்

மனிதர்கள்

 

மிருக வேட்டைக்கோ

பல தடைகள்

மனித வேட்டைக்கோ

பல படைகள்

 

போர்க்களங்களை

செங்கம்பளங்கள் வரவேற்க

செத்துப்போன மனிதத்துக்காக

சவப்பெட்டிகள் காத்துக்கிடக்கின்றன

 

போர்கள் வெற்றிபெற

மனிதம் தோற்றுப்போகிறது!

 

ஈழன்

 


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மனித வேட்டை (கவிதை)”

அதிகம் படித்தது