மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மருத்துவமனையிலிருந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்



Dec 23, 2016

கடந்த 15ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் 9 நாட்கள் சிகிச்சைக்குப் பின் கருணாநிதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகள் செல்வி, கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, முன்னாள் அமைச்சர் வேலு, பொன்முடி, திமுக மூத்த நிர்வாகிகள் மருத்துவமனை வந்திருந்தனர்.

siragu-karunanidhi

மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்தனர். தங்களது ஆதரவையும் மகிழ்ச்சியையும் கருணாநிதிக்கு தெரிவித்தனர். இதையடுத்து கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்புடன் காரில் அவரது கோபாலபுரம் வீட்டிற்கு சென்றார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மருத்துவமனையிலிருந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்”

அதிகம் படித்தது