மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மழைத்துளிக்கு ஏங்கிய பாலைவனச்சோலை (கவிதை)

அதிரா

Apr 10, 2021

 

siragu paalaivanam1

தனைமறந்து… என்மூளையின் மேற்கூரையில்

எதையோ கிறுக்கிக்கொண்டிருக்கிறாள்

எனக்குள்ளிருக்கும் அவள்.

இரவின் நிசப்தம் என்தனிமையை இதமாய் வருடிக்கொடுக்கிறது

இப்போதெல்லாம் நள்ளிரவு என்பது

இனிமையாய் தான் இருக்கிறது

நான் தேடும் தனிமைக்காக எல்லா நிறங்களையும் ஒருசேர காட்டுகிறது

நிழல்கூட தெரியாத இந்தகும்மிருட்டு

இனிமையாய் தான் இருக்கிறது

நான் தேடும் தனிமை உங்கள் கண்களுக்கு புலப்படுமா தெரியவில்லை

அது சலனமற்ற ஏதோ ஒன்று..

அது உருவமற்ற ஏதோ ஒன்று..

என் கண்ணொளிக்கு மட்டும் சில நேரங்களில் படபடக்கிறது

சில நேரங்களில் பளபளக்கிறது

புதையல் தேடி பேயாய் மண்ணை தோண்டி திரியும் செயல் அது

 

 

 


அதிரா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மழைத்துளிக்கு ஏங்கிய பாலைவனச்சோலை (கவிதை)”

அதிகம் படித்தது