மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாவட்ட ஆட்சித் தலைவர் கஜலட்சுமி: கூவத்தூரில் 144 தடை உத்தரவு



Feb 14, 2017

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கியுள்ள கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் நேற்று அதிமுக-வின் பொதுச்செயலாளர் சசிகலா-வும் தங்கினார். இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று சசிகலா உட்பட மூன்று பேருக்கு நான்காண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

Siragu Koovathur-resort

இதையடுத்து சசிகலா எம்.எல்.ஏ-க்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். அக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதராவளர்களை அதிமுக கட்சியிலிருந்து நீக்கினார் சசிகலா.

இதையடுத்து கூவத்தூர் பகுதியில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையைத் தடுக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கஜலட்சுமி 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாவட்ட ஆட்சித் தலைவர் கஜலட்சுமி: கூவத்தூரில் 144 தடை உத்தரவு”

அதிகம் படித்தது