மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு



Mar 13, 2017

இலங்கை கடற்படை நடுக்கடலில் நடத்தியதுப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தபிரிட்ஜோ(22)என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் ஒருவர்காயமடைந்தார்.

Siragu-Fishermen-Struggle-1

இப்படுகொலையைக் கண்டித்து ஏழாவது நாளாகதங்கச்சி மடத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கைக் கடற்படை நடத்தியதாக்குதலைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மீனவர்கள் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். 7 வது நாளாக தங்கச்சிமடத்தில் இன்று(13.03.17) உண்ணாவிரதம்நடைபெறுகிறது.

இந்நிலையில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் உயர் அதிகாரிகளை மார்ச் 20ம் தேதி சந்திக்க உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

அந்த சந்திப்பின்போது கச்சத்தீவை மீட்க வேண்டும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு வேண்டும் போன்ற பிரச்சனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது