மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மீனவர் படுகொலையைக் கண்டித்து 7வது நாளாக போராட்டம்



Mar 13, 2017

இலங்கை கடற்படை நடுக்கடலில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ(22)என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

Siragu-Fishermen-Struggle-1

இப்படுகொலையைக் கண்டித்து ஏழாவது நாளாக தங்கச்சி மடத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கைக் கடற்படை நடத்திய தாக்குதலைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 7 வது நாளாக தங்கச்சிமடத்தில் இன்று(13.03.17) உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ-வின் உடலை இன்று அடக்கம் செய்ய உள்ளனர். இன்று பிற்பகலில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர். தங்கச்சிமடம் மீனவர்களுக்கு கன்னியாகுமரி உள்ளிட்ட ஆறு மாவட்ட மீனவர்கள் ஆதரவு தெரிவித்ததுடன் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மீனவர் படுகொலையைக் கண்டித்து 7வது நாளாக போராட்டம்”

அதிகம் படித்தது