மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தி.மு.க



Sep 28, 2016

அக்டோபர் 17 மற்றும் 19 ல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக.

siragu-election

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், கடந்த 26 ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அமைத்த கூட்டணி இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர் பட்டியல் குறித்து கடந்த சில நாட்களாக ஸ்டாலின் ஆலோசனையில் இருந்து வந்தார். இன்று உறுதிசெய்யப்பட்டு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது திமுக.

ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு வார்டு வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த காங்கிரசுக்கு திமுக அதற்கும் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது.

நாளை மீதமுள்ள 9 மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளது என்று திமுக தெரிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தி.மு.க”

அதிகம் படித்தது