மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை நன்றாக உள்ளது: அப்பல்லோ மருத்துவர்கள்



Sep 27, 2016

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சென்ற 22 ந்தேதி முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

siragu-jeyalalitha1

கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். ஆனால் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவப்பட்டு வருகிறது.

தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், தொடர்ந்து எங்களது கண்காணிப்பில் உள்ளார் எனவும், இது குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தவறான செய்தியைப் பரப்பி வந்தால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை நன்றாக உள்ளது: அப்பல்லோ மருத்துவர்கள்”

அதிகம் படித்தது