மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மெட்ரோ சுரங்கப் பணியால் வீட்டுக்குள் நுழையும் ரசாயன கலவை: பொதுமக்கள் அச்சம்



Apr 20, 2017

சென்னையில் பெரும்பாலான இடங்களில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணி நடைபெற்று வருகிறது. இந்த சுரங்கப் பணியால் பாண்டி பஜார், சர்ச் பார்க் கான்வென்ட், ராஜீவ் காந்தி மருத்துவமனை போன்ற இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது.

Siragu metro train

சில நாட்களுக்கு முன்பு அண்ணாசாலை சர்ச் பார்க் கான்வென்ட் அருகே பத்து அடியில் பள்ளம் ஏற்பட்டது. அதில் ஒரு பேருந்தும் ஒரு காரும் சாலையில் இறங்கியது. இதேபோல் சில இடங்களில் பள்ளங்கள் ஏற்படுகிறது.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிழக்கு முத்தையா தெரு பகுதியில் சுரங்கப்பணி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு உள்ள ஒருவரது வீட்டினுள் உள்ள தரையிலிருந்து சிமெண்ட் கலவை வெளியேறியது. இதனால் பதறியடித்து வெளியில் வந்து மறியலில் ஈடுபட்டனர் அங்குள்ள பொதுமக்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மெட்ரோ சுரங்கப் பணியால் வீட்டுக்குள் நுழையும் ரசாயன கலவை: பொதுமக்கள் அச்சம்”

அதிகம் படித்தது