மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மொபைலில் பேசிகொண்டு வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து



May 9, 2017

விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு தமிழகத்தில் தான் அதிக அளவு ஏற்படுகிறது. இந்த உயிரிழப்பைத் தடுப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் சாலை பாதுகாப்பு கமிட்டி ஆலோசனை நடத்தியது.

Siragu mobile using in two wheeler

இதில் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் மோட்டார் வாகன விதிகள் போன்றவற்றை கண்காணிக்கும்படி உத்தரவிட்டது. இதன்படி போதையில் வாகனம் ஓட்டுவோர், மொபைலில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவோர், அதிவேக பயணத்தில் செல்வோர் போன்றோரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிவேகமாக வாகனம் ஓட்டுவோர், போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது வழக்கு பதியப்பட்டும், அவர்களின் உரிமத்தை இதுவரை ரத்து செய்யவில்லை. இனி இந்த விதிமீறல் செய்வோர் உரிமம் ரத்து செய்யப்படவேண்டும் என்றும், இது குறித்த விவரங்களை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அரசு போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மொபைலில் பேசிகொண்டு வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து”

அதிகம் படித்தது