மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ம.பி., போபால் சிறையில் சிறை பாதுகாவலரைக் கொன்று தப்பிச்சென்ற 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்



Oct 31, 2016

சிமி இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் நாட்டின் பல சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு மத்தியபிரதேசம் போபால் சிறையில் உள்ள சிமி இயக்கத்தைச் சேர்ந்த 8 தீவிரவாதிகள் தப்ப முயன்றனர். அப்போது தடுக்க முயன்ற சிறை பாதுகாவலரைக் கொன்று விட்டு தப்பிச்சென்றனர்.

siragu-simi-terrorist

இதனால் மாநிலம் முழுவதும் தேடும் வேட்டையில் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

போபால் சிறையிலிருந்து ஏற்கனவே ஒரு முறை 10 தீவிரவாதிகள் தப்பிசென்றுள்ளனர். அவர்களில் 5 பேர் பிடிபட்டனர், 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஒடிசாவில் கைது செய்யப்பட்டனர். இன்று நடந்த இச்சம்பவம் இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து 5 காவல் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்த்கெடி என்ற பகுதியில் தப்பிச்சென்ற 8 தீவிரவாதிகளும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மாநில உள்துறை அமைச்சர் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ம.பி., போபால் சிறையில் சிறை பாதுகாவலரைக் கொன்று தப்பிச்சென்ற 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்”

அதிகம் படித்தது