மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரிசர்வ் வங்கி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் 94% வங்கிகளில் டெபாசிட்



Jan 6, 2017

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாத நோட்டுகள் என்று சென்ற நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த செல்லாத நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

siragu-rupees1

முதலில் 4500 ரூபாய் வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும், பின்பு 2000 ரூபாயாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டை சரிசெய்ய புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை விநியோகித்து வருகிறது.

வங்கிகளில் செல்லாத நோட்டுக்களை டிசம்பர் 30 தேதிக்குள் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. கடந்த நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகளில் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடியாகும்.

நவம்பர் 9லிருந்து டிசம்பர் 30 வரை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.14.5 லட்சம் கோடியாகும். இதனடிப்படையில் 500,1000 ரூபாய் நோட்டுக்களில் 94சதவிகிதம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரிசர்வ் வங்கி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் 94% வங்கிகளில் டெபாசிட்”

அதிகம் படித்தது