மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரிசர்வ் வங்கி: விரைவில் புதிய ரூ.1000 நோட்டுகள்



Feb 21, 2017

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது மத்திய அரசு. இதற்கு பதில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. பின் பணத்தட்டுப்பாடு அதிகமாக ஏற்பட்டது.

Siragu hundred rupees

பணமதிப்பு ரத்து நடவடிக்கை நடைமுறைக்கு வந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் புதிய ரூ. 1000 நோட்டுகளை வெளியிட முடிவு செய்துள்ளது ரிசர்வ் வங்கி. புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கிவிட்டது, இன்னும் ஓரிரு மாதங்களில் புழக்கத்திற்கு விடப்படும் என்று அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளிவந்துவிட்டால் சில்லறைத் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் குறையும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரிசர்வ் வங்கி: விரைவில் புதிய ரூ.1000 நோட்டுகள்”

அதிகம் படித்தது