மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரூபாய் நோட்டு வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது



Nov 10, 2016

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் சீனி அகமது (இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர்) என்பவர் வழக்கு தொடர்ந்தார். டிசம்பர் 30 வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்று உத்தரவிட வேண்டி இவ்வழக்கு தொடரப்பட்டது.

siragu-madurai-highcourt

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நாகமுத்து, முரளிதரன் ஆகிய இருவர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மத்திய அரசு கறுப்பு பணத்தை அழித்திடவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. தற்போது மக்களுக்கு சிரமமாக இருந்தாலும் அது நிரந்தரமல்ல தற்காலிகமானதுதான் என இவ்வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துகொண்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரூபாய் நோட்டு வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது”

அதிகம் படித்தது