மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரூபாய் நோட்டு விவகாரம்: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி



Nov 24, 2016

500, 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றது மத்திய அரசு. இதனால் இந்தியா முழுவதும் பணத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் இத்தட்டுப்பாட்டின் நிலை சீராகவில்லை. மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளாலும் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது.

siragu-rupees

அமெரிக்க பங்குச்சந்தைகள் உச்சம் அடைந்துள்ளதால் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 2.5 சதவீதம் சரிந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.68.85 ஆக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், மேலும் சரிந்து ரூ.70.50 என்ற நிலைக்குப் போகக்கூடும் என சந்தை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.68.85 ஆக இருந்ததுதான் இதுவரை சந்தித்த பெரிய வீழ்ச்சி.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரூபாய் நோட்டு விவகாரம்: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி”

அதிகம் படித்தது