மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரேஷனில் பொருட்கள் தட்டுப்பாடு: தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்



Mar 13, 2017

தமிழகம் முழுவதிலும் ரேஷன் கடைகளில் பருப்பு, அரிசி, பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

siragu-ration-shop

இதையடுத்து திமுக எம்.எல்.ஏ-க்கள் பல தொகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு ஸ்டாலினிடம் அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதிலும் ரேஷன் கடைகளில் பருப்பு, அரிசி, பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்யாவசிய பொருட்கள் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

மேலும் இதனை கண்டித்து தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு திமுக-வினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எம்.பி கனிமொழி உள்ளிட்ட பல திமுக எம்.எல்.ஏ-க்களை போலீசார் கைது செய்தனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரேஷனில் பொருட்கள் தட்டுப்பாடு: தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்”

அதிகம் படித்தது