மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

லாரி உரிமையாளர்களுடன் எரிவாயு டாங்கர் லாரிகளும் போராட்டத்தில் பங்கேற்பு



Apr 3, 2017

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும், ஆர்டிஓஅலுவலகங்களில் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து கடந்த மார்ச் 30ந் தேதி முதல் தென் மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

Siragu gas cyilider lorry

இந்த வேலை நிறுத்தத்தில் 4.5 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தென் மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலை நிறுத்தத்தில் இன்று(03.04.17) எரிவாயு டாங்கர் லாரிகளும் பங்கேற்றுள்ளன.

அதன்படி இன்று(03.04.17) காலை முதல் எந்த எரிவாயு டாங்கர் லாரியும் இயங்கவில்லை. எனவே வீடுகள் மற்றும் ஹோட்டல்கள் எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

அத்யாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “லாரி உரிமையாளர்களுடன் எரிவாயு டாங்கர் லாரிகளும் போராட்டத்தில் பங்கேற்பு”

அதிகம் படித்தது